தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தொடக்கவீரர் ஐடென் மார்க்ரமுக்கு இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் அன்று பீல்டிங் செய்ய வரமாட்டார் என்று தகவல் வந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் அன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சின் போது தென்னாபிரிக்கா அணியின் ஐடென் மார்க்ரம் பீல்டிங்கில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை எடுத்து கொள்வார் என்றும், இன்னும் சில நாட்களில் உடல்நலம் சரி ஆகி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். டி வில்லியர்ஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி விக்கெட்டை இழந்தது. கடைசி வரை போராடிய தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், 48 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சால், தென்னாபிரிக்கா அணி 258 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது, இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது தென்னாபிரிக்கா அணி.
இந்த இலக்கை துரத்தும் உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினார்கள். விராட் கோலி, லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார்கள்.