தோனி இல்லன்னா உங்களால எதுவும் பண்ண முடியாதா? – கோலிக்கு அகர்கர் கேள்வி

டி20 போட்டியிலாவது தோனிக்கு சரியான மாற்றுவீரரை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டது. ஒருநாள் போட்டியை 4-1 எனவும், டி20 தொடரை 1-1 என நிறைவுபெற்றது.

இந்நிலையில் 36 வயதான விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் தோனியை இந்திய அணியின் வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு சரியான மாற்று வீரரை தேர்ந்தெடுப்பது அவசியம் என அகர்கர் தெரிவித்துள்ளார்.

அகர்கர் கேள்வி:

ஒருநாள் போட்டியில் தான் விளையாடுகிறார் என்றால், டி20 போட்டியிலும் தோனியை இன்னும் பயன்படுத்துவது வேதனை. அவருக்கு சரியான மாற்று வீரரை இன்னும் இந்திய அணியில் பயிற்சி கொடுக்காதது தவறு.

தினேஷ் கார்த்திக் தோனிக்கு சரியான மாற்று வீரராக இருப்பார். அவர் டி20 போட்டிகளில், களத்தில் வந்தவுடனேயே அதிரடி ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவர்.

தோனி திறமையானவர் தான் ஆனால், அவரை எவ்வளவு நாட்கள் தான் பயன்படுத்த முடியும். கேப்டன் கோலி இன்னும் தோனியையே நம்பி இருப்பது கவலையாக உள்ளது. கார்த்திக் அல்லது, இளம் வீரரை இந்திய அணிக்கு கீப்பராக கொண்டுவருவது நல்ல முடிவாகும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.