"எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே" ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் 1

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு உலகின் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு பெருமிதம் செய்யும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் டெஹ்ராடூனில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக அறிவித்தது.

"எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே" ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் 2

உலகக்கோப்பை தேர்ச்சி போட்டியிலும் தற்போது நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கெதிராகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு ஜூன் 14ம் தேதி இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிற்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. இருந்தபோதிலும் அந்த அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ராஜிவ் காந்தி மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்காக வழங்கியது.

"எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே" ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் 3

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பில், ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சாளர் ஷ்ரஃபியூடின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இவர் உலகக்கோப்பை தகுதிபோட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பாக பந்துவீசினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இறுதிவரை நின்று வெற்றி தேடித்தந்தார். இந்தியாவிற்க்கெதிராக ஆடவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி தாண்டிவந்த தடங்கல்களை பற்றியும் கூறினார். அவர் கூறியதாவது, “நாளுக்குநாள் எங்கள் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக மாறி வருகிறது. உள்ளூர் போட்டிகளும் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எங்கள் அணியில் ஒருவர் கூட எளிதாக இந்த நிலைக்கு வரவில்லை. தோனியை போலவே எங்கள் அணியிலும் ஒவ்வொரு வீரர்களுக்கும் பல கதைகள் உள்ளன. ஒவ்வொருவர் கதையையும் படமாக எடுக்கலாம். எங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் செய்த முயற்சியே நாங்கள் இப்பொழுது இந்த எளிதான நிலைக்கு உள்ளத்திற்கு காரணம். இனிவரும் வீரர்களுக்கு இந்த நிலையும் வரக்கூடாது” .

"எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே" ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் 4
The inaugural edition of the Afghanistan Premier League will be played in the United Arab Emirates in October this year, it was confirmed on Friday (April 27). The board had already signed the Memorandum of Understanding in January this year.

மேலும் அவர், ” இந்தியா உலக தரம் வாய்ந்த அணி. வெல்வது மிகவும் கடினம் எனினும், எங்கள் அணியிலும் மிகசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கடினமான போட்டியை ஏற்படுத்துவோம். எங்கள் அணியை எளிதாக எண்ண வேண்டாம். அதற்கு தான் முழு மூச்சுடன் பயிற்சி செய்து வருகிறோம்” இவ்வாறாக கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *