இலங்கை செல்லும் இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்ப்பு!! 1

19 வயதுக்கு உட்பட்டோர் அணி அடுத்த மாதம் இலங்கை சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஆட உள்ளன. இதற்கான இந்திய அணியில் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்ப்பு!! 2

2018 ம் ஆண்டு 19வயதுக்கு உட்பட்டோர் உலககோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இதேபோல் 2020ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பைக்கும் தற்போதிருந்தே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வீரர்கள் தயார் செய்யப்படுவர்.

நேற்றையதினம் பயிற்சி அணியில் சேர்க்கப்பட்டிருந்த அர்ஜுன், இன்று இலங்கை செல்லும் வீர்ரகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை செல்லும் இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்ப்பு!! 3

கடந்த சில மாதங்களாக இவரின் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த குளோபல் டி20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமின்றி 4 ஒவர்களில் 4 விக்கெடுகள் வீழ்த்தினார். இது இந்திய அணி தெரிவாணையத்தை பெரிதும் ஈர்த்தது.
மேலும், இங்கிலாந்து அணிக்காக வலைபயிற்சி பந்துவீச்சாளராக இருக்கையில், இவர் வீசிய பந்து பேர்ஸ்டோவை காயப்படுத்தியது. சிறப்பாக ஆடி வருகிறார் எனவும் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அண்டர் 19 பயிற்சி அணியில் சேர்க்கப்பட்டார். பயிற்சியில் சிறந்த முறையில் செயல்பட்ட காரணத்தினால் இன்று அறிவிக்கப்பட்ட இலங்கை செல்லவிருக்கும் அணியின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

இலங்கை செல்லும் இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்ப்பு!! 4

மேலும், அர்ஜுன் டெண்டுல்கர் கூறுகையில், எனது முன்னோடியாக ஆஸ்திரேலியா வேக பந்துவீச்சாளர் மிச்சேல் ஜான்சன் மற்றும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளனர். கண்டிப்பாக இவர்களைப்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *