இந்திய அணியின் தற்போதைய நிலைமைக்கு தோனி தான் காரணம் : வேகப்பந்து வீச்சாளர்

India's Ashish Nehra, right, gives team mate Hardik Pandya bowling tips as Pandya gets ready to bowl his last delivery against Bangladesh at the ICC World Twenty20 2016 cricket match in Bangalore, India, Wednesday, March 23, 2016. (AP Photo/Aijaz Rahi)

இந்திய டி20 அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா நாளையுடன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெருகிறார். 1999ல் தனது அறிமுகப் போட்டியில் ஆடினார் ஆசிஷ் நெஹ்ரா. தனது 18 வருடன் கிரிக்கெட் வாழக்கையில் அசாருதின், அஜய் ஜடேஜா, கங்குலி, தோனி, கோலி என பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளார் நெஹ்ரா.

தற்போது தனது 18 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் யார் சிறந்த கிரிக்கெட் மூளை எனக் கூறியுள்ளார்.

என்னைப் பொருத்த வரையில் தோனி மற்றும் அஜய் ஜடேஜா ஆகிய இருவரும் தான் கிரிக்கெட் மூளையில் அசத்தியவர்கள். நான் பயனித்த இந்த கிரிக்கெட் வாழ்க்கையில் அவர்களைத் தவிற வேரு எவரும்  கிரிக்கெட்டை அவ்வளவு தெரிந்து வைத்திருக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்.

குறிப்பாக தோனி, கிரிக்கெட்டில் மிககும் புத்திக் கூர்மை வாய்ந்தவர். அவரால் தற்போது இந்திய கிரிக்கெட் மாறியுள்ளது.

தற்போது நெஹ்ராவிற்கு 38 வயதாகிறது, மேலும், இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியைப் பற்றியும் பேசினார்

தற்போது இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளாக செயல்படும் எண்ணம் இல்லை. அதை பற்றி பேசினால் சிறிது முடிவு எடுக்கலாம், ஆனால்ம் 2019 உலகக்கோப்பைக்கு எனவெல்லாம் இல்லை. இதனை பிறகு பார்ப்போம் 

எனக் கூறினார் நெஹ்ரா.

நாளையுடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகும் நெஹ்ரா, இதுவரை 12 அறுவை சிகிச்சைக்ளை கிரிக்கெட் வாழ்க்கையில் செய்து விளையாடியுள்ளார்.

மேலும், விராட் கோலியின் கேபிடன்சி திறமையைப் பற்றியும் பேசினார்,

விராட் கோலியின் வாழக்கையைப் பாருங்கள் அவர் தற்போது அதிவேகமாக வழியில் வருவதை எல்லாம் தட்டி வீசிக் கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என அவருக்குத் தெரியும். அவருக்கு எந்த ஒரு அறிவுரைகளும் தேவை இல்லை. அவருக்கு தேவையானவற்றைக் கொடுக்க ரவி சாஷ்திரி இருக்கிறார்.

என விராட் கோலியைப் புகழ்ந்தார்.

நியூசிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஒருநாள் தொடர் முடிந்துள்ள வேலையில் டி20 தொடர் நாளை டெல்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் துவங்கவுள்ளது.

ஒருநாள் தொடரில் எப்போதும் இந்தியாவின் கை ஓங்கி இருந்தாலும், இதுவரை நடந்த டி20 போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி எ8ப்போதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 6 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளது 5 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் சென்றுள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்பதே உண்மை.

ஒருநாள் போட்டியிலும் இந்தியாவிற்கு அவ்வளவு எளிதாக தொடரை கொடுத்துவிடவில்லை நியூசிலாந்து. மூன்றாவது போட்டியின் கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று போராடி தொடரைக் கைவிட்டது என்பதே நிதர்சனம்.

Editor:

This website uses cookies.