இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியுடன் (நவ்.1) அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துவிட்டார் ஆசிஷ் நெஹ்ரா. முதல் டி20 போட்டியின் இறுதியில் வீரர்கள் தங்களின் தோலில் தூக்கி மைதானத்தை வலம் வர, மக்கள் அவருக்கு கையசைத்து அற்புதமான பிரியாவிடையைப் பெற்றார் நெஹ்ரா.
அவர் தனது முதல் சர்வதேச போட்டியை 1999ல் இலங்கைக்கு எதிராக முகமது அசாருதின் தலைமையில் ஆடினார். அதன் பிறகு தனது பெரும்பாலான போட்டிகளில் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலியின் தலைமையிலேயே ஆடினார். சொல்லப்போனால், அவருடைய மிக அற்புதமாக பந்து வீசிய போட்டிகள் எல்லாம் கங்குலி தலைமையிலானது தான்.
அப்படியான, சௌரவ் கங்குலி தற்போது ஆசிஷ் நெஹ்ராவின் ஓய்விற்குப் பிறகு அவரை புகழ்ந்து வருகிறார்.
சௌரவ் கங்குலி அவரைப் பற்றி கூறியதாவது,
அவருடைய சிறந்த நண்பர் அவருடைய பிசியோ(உடல்கூறு ஆய்வாளர்) தான். சொல்லப் போனால் அவருடைய மனைவியை விட பிசியோவுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார் நெஹ்ரா.
னெஹ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் அவருடைய உடல் அவருக்கு விளையாடன் ஒத்துளைத்தது இல்லை. இத்தனை காயங்களுக்குப் பிறகும் னெஹ்ரா இவ்வளவு வருடங்கள் ஆடி இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஒரு விசயமாகும். அவர் ஒரு மிகச் சிறந்த போட்டியாளர். ஒரு போதும் முயற்சியைக் கைவிடமாட்டார்
ஆனால், அவர் மிக எளிதானவர். நிறைய காயங்கள் அவருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஃபீல்டிங் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். ஆனால், பந்து வீச்சு என்று வரும் போது அவர் ஒரு வித்யாசமான வீரராக மாறிவிடுவார்.
எல்லோருக்கும் இவர் போன்று தனது சொந்த ஊரில் ஓய்வு பெறும் பாக்கியம் கிடைப்பது இல்லை. முதலில் சச்சின் டெண்டுகர், தற்போது ஆசிஷ் நெஹ்ரா இருவர் மட்டுமே அந்த வாய்பை பெற்ற பாக்கியசாலிகள்.
தேர்வுக்குழுவினர் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கோட்லா மைதானத்தில் பந்து வீசுவது கடினம், இருந்தும் தனது கடைசி போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் நெஹ்ரா.
நெஹ்ரா 18 வருடங்கள் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். தற்போது வரை கிரிக்கெட்டில் மட்டும் அடிக்கடி காயமடைந்து 12 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
நெஹ்ரா ஒரு சிறந்த ஒரு மனிதர். அணியில் தேர்வானாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார், அணியில் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக தான் இருப்பார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் நெஹ்ரா. எப்போதும் சிரிப்புடன் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார் அவர். இளைமையாக அவர் இருக்கும் போதிருந்தே அவரை நான் பார்த்து வருகிறேன்.
என் தலைமையிலாக அவர் ஆடும் போது, சில போட்டிகளில் அவரை அணியில் சேர்க்க முடியாமல் போகும். அதனைக் கூறியவுடன் புண்ணகைத்து அமைதியாக செல்வார். ஆனால், போட்டி முடிந்தவுடன் சரியாக இரவு 11 மணிக்கு என் அறையில் காலிங் பெல் அடிக்கும், யார் எனப் பார்த்தால் அது ஆசிஷ் நெஹ்ரா.

ஒரு ஷார்ட்ஸ் ஒன்றை போட்டுக்கொண்டு, ஒல்லியான அவரது கால்களைக் காட்டிக்கொண்டு உள்ளே வருவார். வந்தவுடனேயே ஏன் என்னை அணியில் சேர்க்கவில்லை என பாவமாக கேட்பார் நெஹ்ரா. அதற்கு நான், வேறு ஒரு நன்றாக் ஆடும் வீரருக்கு வாய்ப்பளிக்க நினைத்தேன் அதனால் தான் உன்னை அணியில் சேர்க்கவில்லை எனக் கூறுவேன். உடனடியா நெஹ்ரா, பல புள்ளி விவரத்துடன் பேச ஆரம்பித்துவிடுவார்.
நான் உங்களுக்காக மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும், பார்க்கிறீகளா? பந்தை கொடுங்கள் உடனடியாக காட்டுகிறேன். எனக் கூறி வாதிடுவார் நெஹ்ரா. சொன்னபடியே தென்னாப்பிரிக்கவுடனான அடுத்த போட்டியில் செய்து காட்டினார் நெஹ்ரா.
என பல நினைவுகளை எடுத்துக் கூறுகிறார் கங்குலி.