டெல்லி டி20யில் நெஹ்ரா விளையாடுவாரா? உத்திரவாதம் இல்லை – எம்.ஸ்.கே பிரசாத்

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத ஆஷிஷ் நெஹ்ரா, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம் பிடித்துள்ளார். நியூஸிலாந்துடன் முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில், இதனால் தன் சொந்த ஊரில் கடைசி போட்டி விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியிருந்தார்.

அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதில் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த உத்திரவாதமும் இல்லை,” என அணியின் தேர்வாளர் எம்.ஸ்.கே பிரசாத் கூறினார்.

டெல்லி டி20 போட்டியில் அவர் நிச்சியமாக விளையாடுவாரா என்று எங்களால் சொல்ல முடியாது,” என பிரசாத் தெரிவித்தார்.

அவர் விளையாடுவாரா விளையாட மாட்டாரா என்று அணி மேலாண்மை தான் முடிவு செய்ய வேண்டும். அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதில் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த உத்திரவாதமும் இல்லை. அதை பற்றி அந்த நாளில் தான் முடிவெடுப்போம்,” என பிரசாத் கூறினார்.

நியூஸிலாந்து தொடர் வரை இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக பிரசாத் தெரிவித்தார்.

அவரை நியூஸிலாந்து தொடர் வரைக்கும் தான் பார்ப்போம் என ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அணி மேலாண்மையிடமும் நாங்கள் பேசிவிட்டோம். நாங்கள் ஜூனியர் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ததை நீங்கள் பார்த்திருந்தால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களையே வைத்திருக்கிறோம் என்று புரியும். தென்னாப்ரிக்காவிலும், சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியுடனும் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். புது முக வீரர்கள் வந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு வழி விட இது போன்ற முடிவுகள் எடுப்பது சந்தோசமாக இருக்கிறது,” என எம்.ஸ்.கே பிரசாத் தெரிவித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றெ ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி: விராட் கோலி(கேப்டன்), சிகர் தவன், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ் தோனி, அக்சர் படேல், யுஸ்வேந்த்ர சகால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா (முதல் போட்டிக்கு மட்டும்), முகமது சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.