திருப்பி அடித்த பாகிஸ்தான்… தூசியானது நியூசிலாந்து !! 1
திருப்பி அடித்த பாகிஸ்தான்… தூசியானது நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் பாகிஸ்தான் அணி  48 ரன்கள் வித்தியாசத்தில் அதிசய வெற்றி பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த அணிகளுள் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் சமீப காலமாக தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

திருப்பி அடித்த பாகிஸ்தான்… தூசியானது நியூசிலாந்து !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, டி.20 தொடரையும் தோல்வியுடன் துவங்கிய பாகிஸ்தான் அணி, இன்று நடைபெற்ற இரண்டாவது டி.20 போட்டியில் திருப்பி அடித்துள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

திருப்பி அடித்த பாகிஸ்தான்… தூசியானது நியூசிலாந்து !! 3

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரர்களான ஃப்கர் ஜமான் 50 ரன்களும், அஹமத் சேஜாத் 44 ரன்களும் எடுத்து சூப்பரான துவக்கம் கொடுத்தனர்.

அடுத்ததாக வந்த பாபர் அசாம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், சர்பராஸ் அஹமத் 41 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி 201 ரன்கள் குவித்தது.

திருப்பி அடித்த பாகிஸ்தான்… தூசியானது நியூசிலாந்து !! 4

இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சாட்னர் (37), மற்றும் வீலரை (30), தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 18.3 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலை பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *