ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி.
எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் கண்டது ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார். 141*, 40,6, 239, 65* என களமிறங்கும்போதெல்லாம் பெரிதளவில் ரன்கள் குவிக்கிறார். இதை முன்வைத்து இந்திய வீரர் அஸ்வின் குறும்பாக ட்விட்டரில் கூறியதாவது:
One day teams will need to talk to Steve Smith prior to a test match and settle down on a number that both parties agree upon. Insane Stuff? #Ashes
— Ashwin ?? (@ashwinravi99) December 26, 2017
டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னால் அணிகள் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய நிலை ஒருநாள் உருவாகலாம். அப்போது இரு தரப்புக்கும் ஏற்றாற்போல ஒரு ஸ்கோரை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையும் உருவாகலாம். நம்பமுடியாத ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர் சதமெடுத்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பேன்கிராஃப்டும் 100 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். 64 பந்துகளில் அரை சதமெடுத்தார் வார்னர். உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
அணியின் ஸ்கோர் 122-ல் இருந்தபோது நிதானமாக ஆடிவந்த பேன்கிராஃப்ட் 95 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதன்பிறகு சதத்தை நெருங்கியபோது 99 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த வார்னர் எதிர்பாராதவிதமாக டாம் கியூரன் பந்துவீச்சில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
1 ரன்னில் சதத்தைத் தவறியதால் மிகவும் சோகமாக களத்தை விட்டு வார்னர் வெளியேறத் தயாராக இருந்தபோது கியூரன் நோ பால் வீசியதாக நடுவர் அறிவித்தார். இதனால் பெரிய கண்டத்திலிருந்து தப்பினார் வார்னர். அடுத்தப் பந்திலேயே ஒரு ரன் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்தார் வார்னர்.
இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். ஆனால் அதிக ரன்கள் சேர்க்கமுடியாமல் 103 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார் வார்னர். அடுத்தப் பத்தாவது ஓவரில் கவாஜாவை 17 ரன்களில் வெளியேற்றினார் பிராட். இதனால் 38 ரன்கள் இடைவெளிக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது இங்கிலாந்து.
இன்றைய நாள் ஆட்டத்தில் 327 ரன்னிற்கு ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்து தற்போது 64-1 என்ற னிலையில் ஆடிக்கொண்டிருகிறது இங்கிலாந்து அணி.