கிறிஸ் மோரிஸ் 7 கோடி ரூபாய்க்கு தகுதியான வீரர் தான்; ஜென்னிங்ஸ் சொல்கிறார்
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான டெல்லி அணி கிறிஸ் மோரிஸிற்காக டெல்லி அணி 7.1 கோடி ரூபாய் செலவழிக்கும் அளவிற்கு தகுதியான வீரர் தான் என்று தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, தென் ஆப்ரிக்கா அணியின் ஆல் ரவுண்டரான கிறிஸ் மோரிஸை 7.1 கோடி ரூபாய் கொடுத்து RTM கார்டு முறையில் தனது அணியில் தக்க வைத்து கொண்டது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS
இது குறித்து பேசிய அவர் “கிறிஸ் மோரிஸை போன்ற ஒரு சிறந்த ஆல் ரவுண்டருக்காக டெல்லி அணி 7.1 கோடி ரூபாய் செல்வழித்தது சரியானது தான். கடந்த போட்டிகளில் மோரிஸின் விளையாட்டை எடுத்து பார்த்தால் தெரியும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் என இரண்டிலுமே ஒரு போட்டியின் முடிவை மாற்றும் அளவிற்கு மோரிஸ் சிறந்த வீரர். ஒரே ஓவரில் 20 ரன்கள் அடிக்கும் அளவிற்கு கூட மோரிஸ் டி.20 போட்டிகளில் தலை சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய மோரிஸ், டெல்லி அணிக்காக 154 ரன்கள் எடுத்துள்ளார், அது மட்டுமல்லாமல் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 163.82 இதன் காரணமாகவே டெல்லி அணி இவருக்காக 7.1 கோடி ரூபாய் செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.