தாக்காவில் நடைபெற்ற வங்கதேசம் – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மத்தியூ வேட் விழுந்த பிறகு மற்றும் நடுவரிடம் தமீம் இக்பால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டியின் 15% சம்பளத்தை செலுத்தவேண்டும் என அபராதம் விதித்தது ஐசிசி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 71 மற்றும் 78 ரன் அடித்து, வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்திருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் விறுவிறுப்பான கட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்கதேசம்.
அடுத்த மாதம் இந்தியாவுடன் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி விளையாடுவதற்கு முன்பு, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை ட்ரா செய்ய முயற்சி செய்யும். முதல் டெஸ்ட் போட்டியில் கோபத்தை வெளிக்காட்டியதால், இக்பாலுக்கு பிரச்சனை வந்துள்ளது.
அந்த அபராதத்தை செலுத்த வங்கதேச வீரர் தமீம் இக்பாலே ஒப்புக்கொண்டார். முதல் போட்டியின் போது இரண்டு பிரச்சனையில் ஈடுபட்டார் இக்பால்.
முதல் முறை, ஆஸ்திரேலியா வீரர்கள் கை உரையை மாற்றிக்கொண்டே இருந்ததால், கோபமடைந்த இக்பால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறை, மத்தியூ வேட் அவுட் ஆகியதும் பெவிலியனுக்கு போக சொல்லி இக்பால் வெறுப்பேத்தினார்.
அந்த டெஸ்ட் போட்டியின் போது பேசிய தமீம் இக்பால்,”இந்த விக்கெட்டை நம்பமுடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இனி எத்தனை உள்ளூர் போட்டியை இங்கு விளையாடவுள்ளோம் என்பது தான் கேள்வி,” என கூறினார்.
“சர்வதேச போட்டிகளை மட்டும் தான் நாங்கள் இங்கு விளையாடுவோம், இதனால் வெளிநாட்டு அணிகளுடன் விளையாட சாதகமாக இருக்கிறது,” என இக்பால் தெரிவித்தார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்ற வங்கதேச அணி, இந்த டெஸ்ட் தொடரை வென்று சாதனையை படைக்க காத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜொலித்த தமீம் இக்பால், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.