இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிஜு ஜார்ஜை பீல்டிங் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. அடுத்து நடக்கும் மகளிருக்கான கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கு முன்பு, சில பயிற்சியாளர்களை நியமித்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு துஷார் அரோதே பயிற்சியாளராகவும், பிசியோதெரபியாக ட்ரேசி பெர்னாண்டஸ் உள்ளார்.
உலக கோப்பைக்கு முன்னதாக மும்பையில் ஆயத்த முகாம் நடத்தும் என எதிர்பார்க்க படுகிறது. இங்கிலாந்தில் மகளிருக்கான கிரிக்கெட் உலக கோப்பை ஜூன் 24-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால், ஜூன் 6-இல் தொடங்கி ஜூன் 10-வரை முகாம் நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது.
மகளிருக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் ஜூன் 24ஆம் தொடங்குகிறது. இதனால், இங்கிலாந்திற்கு ஜூன் 11-ஆம் தேதி புறப்படுகிறது. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு பயிற்சி போட்டியில் இந்தியா ஆட உள்ளது. ஜூன் 13-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் மோதவுள்ளது.
சிறிது நாளுக்கு முன்பு, தொடர்ந்து 16 வெற்றிகளை ருசித்தது இந்திய அணி. இந்த அணியின் பலத்தை அதிகரிக்க பிஜு ஜார்ஜை பீல்டிங் பயிற்சியாளராக அறிவித்தது பிசிசிஐ.
ஜூன் 19 மற்றும் ஜூன் 21 ஆம் தேதியில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் 24-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. அத்துடன் ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுடனும், ஜூலை 2ஆம் தேதி பாகிஸ்தானுடனும், ஜூலை 5ஆம் தேதி இலங்கையுடனும், ஜூலை 8ஆம் தேதி தென்னாப்ரிக்காவுடனும், ஜூலை 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், ஜூலை 15 நியூஸிலாந்து அணியுடனும் இந்திய அணி விளையாடவுள்ளது.