மும்பையை சேர்ந்த அங்குஷ் ஜெய்ஸ்வால் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஆனால் இவரின் பந்து வீச்சின் செய்கைகள் சரி இல்லை என்று கூறி பிசிசிஐ அவரை இடை நீக்கம் செய்தது.
சூழல் பந்து வீச்சாளரான அங்குஷ் ஜெய்ஸ்வால் சிறப்பாக பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றார், விக்கெட்களை எடுப்பதில் இவர் வல்லவர் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்களை காய் பற்றி சாதனை படைத்தார்.
” அன்குஷ் ஜெய்ஸ்வால் முறையாக தான் பந்து வீசி வருகிறார் என்று உறுதி செய்யப்பட்டார் என்றால் அவர் மீண்டும் பிசிசிஐ நடத்தும் அனைத்து போட்டிகளிலும் அவர் மீண்டும் பந்து வீச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அன்குஷ் ஜெய்ஸ்வால் கூறியது :
” அனைவரும் என்னை என்ன நடந்தது என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, ஆனால் மீண்டும் நான் என் திறமையை வெளி படுத்தி மீண்டும் அணியில் விளையாடுவேன் என்று நான் நம்புகிறேன் ” என்று
அன்குஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
” பிசிசிஐ என்னை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடை நீக்கம் செய்தது எனக்கு மிகவும் வருத்தமாக தான் உள்ளது, மீண்டும் நான் என் திறமையை வெளி படுத்தி மீண்டும் அணியில் விளையாடுவேன் என்று நான் நம்புகிறேன்” என்றும் அன்குஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
” நான் தற்போது என் பந்து வீச்சில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன், என் பந்து வீச்சை நான் பிசிசிஐ இடம் நிறுவிப்பேன்” என்று மும்பை பந்து வீச்சாளர் அன்குஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
அன்குஷ் ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியில் 19 ஓவர்கள் பந்து வீசி 63 ரன்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார். அது மட்டும் இல்லாமல் 19 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார் இதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.