இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு yo-yo உடற்பயிற்சி பரிசோதனை கட்டாயமாக்கபட்டதன் பின்னணி.. தோனி விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களுக்கு பாதிப்பா?? 1

பிசிசிஐ மற்றும் அதன் தேர்வுக்குழுவும் இணைந்து இனிவரும் தொடர்களுக்கு அணி வீரர்களுக்கு ஃபார்ம் மற்றும் காயமின்மை மட்டுமே போதாது எனவும் உடல்தகுதி மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டியது எனவும் முடிவு செய்துள்ளது.

இதற்க்காக வீரர்கள் yo-yo உடல்தகுதி பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது. இதை காலம்தாழ்த்தாது வரும் தொடர்களுக்கு முன்பிருந்தே இந்த பரிசோதனையை தொடரவும் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தான் அணியுடனா டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு செல்லவிருக்கும் வீரர்களுக்கும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. வரும் ஜூன் 3 மற்றும் 4 தேதிக்குள் ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் வீரர்கள் படிசோதனைக்கு வருமாறும், ஜூன் 8 மற்றும் 9ம் தேதிக்குள் இங்கிலாந்து செல்லவிருக்கும் வீரர்கள் பரிசோதனைக்கு வருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. இவை பெங்களூருவில் நடைபெறவிருக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு yo-yo உடற்பயிற்சி பரிசோதனை கட்டாயமாக்கபட்டதன் பின்னணி.. தோனி விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களுக்கு பாதிப்பா?? 2

இந்த பரிசோதையின் ரிப்போர்ட் அடிப்படையிலேயே வீரர்கள் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இதில் தகுதி பெறாதவர்கள் அணியில் இடம் பெற்றிருந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு தகுதி பெற்ற வீரர்களுக்கு இடமாளிக்கப்படும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Yo-yo பரிசோதனை ஒரு பார்வை..

20 மீட்டர் இடைவெளியில் இரண்டு கோணவடிவ பொருள் வைக்கப்படும். வீரர்கள் இதற்கிடையில் ஓட வேண்டும். வினாடிகள் கணக்கிடப்படும். அது பிசிசிஐ விதிருக்கும் எல்லைக்குள் வந்தால் மட்டுமே தகுதிபெற முடியும்.

பரிசோதனை முறை,

ஒரு முனையிலிருந்து மற்றோரு முனைக்கும் மீண்டும் அதே முனைக்கு திரும்புவது ஒரு சுழற்சி எனப்படும். ஒரு சுழற்சியில் 40மீட்டர் தூரம் கடக்கப்பட்டிருக்கும். ஒரு பீப் ஒலி ஒலிக்கையில் ஓட்டம் துவங்கி இரண்டு மூன்றாவது பீப் ஒலி ஒலிக்கையில் ஒரு சுழற்சி முடிக்கப்பட்டிருக்க வெண்டும்.
அதன் விநாடிகளை கணக்கில் கொண்டே பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு yo-yo உடற்பயிற்சி பரிசோதனை கட்டாயமாக்கபட்டதன் பின்னணி.. தோனி விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களுக்கு பாதிப்பா?? 3

இது மாதிரியான சோதனை இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பல நாடுகளில் உள்ளது. ஆனால் இந்தியா போன்று கட்டாயமாக்க படவில்லை.
சில மாதங்களுக்கு முன்பாக, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் உட்படுத்தபட்டு தேர்ச்சிபெற தவறிவிட்டனர் என்பது குறிப்பிட தக்கது. இதனாலேயே, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு yo-yo உடற்பயிற்சி பரிசோதனை கட்டாயமாக்கபட்டதன் பின்னணி.. தோனி விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களுக்கு பாதிப்பா?? 4

இதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே காலகட்டத்திலேயே இந்த சோதனை இருந்தது. ஆனால் அவர் பதவிக்காலம் முடிந்த போதே இந்த பரிசோதனையும் ரத்து செய்து விட்டார். ஆனால் இனிவரும் காலங்களில் இது போன்ற பரிசோதனைகள் தேவை என அறிந்து முன்னெடுத்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு yo-yo உடற்பயிற்சி பரிசோதனை கட்டாயமாக்கபட்டதன் பின்னணி.. தோனி விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களுக்கு பாதிப்பா?? 5

இது தற்போதைய இந்தியஅணி வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க பெரும் சவாலாகவும் போட்டியாகவும் இருக்கும் என்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.

தோனி, விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற முன்னணி வீரர்கள் இதில் தேர்ச்சிக்க தவறினால் நிச்சயம் அவர்களின் இடம் கேள்விக்குறியே..

இறுதி அணியின் பட்டியல் ஜூன் 8ம் தேதி நடைபெறவிருக்கும் பரிசோதனைக்கு பின்பே வெளிவரும் என பிசிசிஐ அறிவித்தது வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *