விராட் கோலி, ரோகித் சர்மா

விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுககு இனி டி20 போட்டிகளில் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடருக்கு வீரர்களை அறிவிக்கும்போது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

விராட் கோலி, ரோகித் சர்மா

அந்த சமயத்தில் விராட்கோலி, ரோகித் சர்மா இருவருக்குமே இனி டி20 போட்டிகளில் இடம்கொடுமாட்டார்கள் என செய்திகள் நிலவியது. ஏனெனில் இருவருமே டி20ல் விளையாடுவதற்கு தயாராக இருந்தார்கள். ஆனாலும் எடுக்கப்படவில்லை. இந்த செய்திகள் பற்றி பிசிசிஐ எதுவும் பேசவில்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

அப்போது, ரோகித் சர்மா ஃபிட் இல்லை. விராட் கோலியை டி20ல் விளையாடவைக்கலாம். அவர் பழைய பார்மிற்கு வந்திருக்கிறார். ஃபிட்டாகவும் இருக்கிறார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.

விராட் கோலி, ரோகித் சர்மா டி20 வாழ்க்கை மொத்தமா முடிஞ்சிருச்சு.. நியூசிலாந்து தொடரிலும் இல்லை - பிசிசிஐ திடீர் முடிவு! 1

தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்  முடிவுற்றவுடன், நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.

இன்னும் சில தினங்களில் புதிய தேர்வுக்குழு நியமிக்கப்படவுள்ளது. இதற்கு 2வது முறையாக சேத்தன் சர்மா தலைமை ஏற்கவுள்ளார் என்கிற தகவல்களும் வருகிறது. அவர் தலைமையிலான குழு நியூசிலாந்து தொடருக்கு வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

நியூசிலாந்து டி20 தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்க இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

விராட் கோலி, ரோகித் சர்மா

இது பற்றி பிசிசிஐ அதிகாரி கூறுகையில், “துரதிஷ்டவசமாக, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இனி டி20 பிளானில் இல்லை. அவர்களை வேண்டுமென்றே நீக்கவேண்டும் என முடிவு செய்யவில்லை. இந்த முடிவு இந்திய அணியின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்டது. இளம் வீரர்களை கொண்டு அணியை கட்டமைக்க பல திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளது. அதில் சீனியர் வீரர்கள் கவனம் செலுத்தட்டும். அதனடிப்படையில் தான் அவர்களுக்கு டி20ல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *