இத செய்யுறதுக்கு நீங்க விளையாடமையே இருக்கலாம்... தோனி டீமில் இருந்தும் யூஸ் இல்லை; கராராக பேசிய ஹர்பஜன் சிங்... காரணம் என்ன..?  1
இத செய்யுறதுக்கு நீங்க விளையாடமையே இருக்கலாம்… தோனி டீமில் இருந்தும் யூஸ் இல்லை; கராராக பேசிய ஹர்பஜன் சிங்… காரணம் என்ன..?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியதை முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணியுடனான இரண்டாவது போட்டியிலும் பேட்டிங்கில் கடுமையாக திணறியது.

இத செய்யுறதுக்கு நீங்க விளையாடமையே இருக்கலாம்... தோனி டீமில் இருந்தும் யூஸ் இல்லை; கராராக பேசிய ஹர்பஜன் சிங்... காரணம் என்ன..?  2

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் எடுத்து கொடுத்தார். தோனி மற்றும் சிவம் துபே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். ரஹானே, மொய்ன் அலி போன்ற சீனியர் வீரர்களும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 1100 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கில் செயல்பட்ட விதம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இத செய்யுறதுக்கு நீங்க விளையாடமையே இருக்கலாம்... தோனி டீமில் இருந்தும் யூஸ் இல்லை; கராராக பேசிய ஹர்பஜன் சிங்... காரணம் என்ன..?  3

பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இந்த போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தோனி 9வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியதை மிக கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது வீரராக களமிறங்கியதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது. தோனி 9வது இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்றால் அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு டீமில் இடம் கொடுப்பது சென்னை அணிக்கு பயனளிக்கும். ஏனெனில் தோனி 9வது இடத்தில் களமிறங்குவதால் சென்னை அணிக்கு எந்த பயனுமே கிடைக்க போவது இல்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு முன்பாக ஷர்துல் தாகூர் எதற்காக களமிறகப்பட்டார், ஷர்துல் தாகூரால் ஒரு போதும் தோனியை போன்று அதிரடியாக விளையாட முடியாது, தோனி அடிக்கும் ஷாட்களை ஷர்துல் தாகூரால் அடிக்கவே முடியாது. அப்படி இருக்கும் போது முடிவு எடுக்கும் இடத்தில் இருக்க கூடிய தோனி எதற்காக தனக்கு முன்பாக ஷர்துல் தாகூரை பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டும். நான் எனக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை மட்டும் தான் பேசுவேன், என்னை பொறுத்தவரையில் தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கியது பெரும் தவறு” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *