அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகும் பிக் பாஷ் லீக் 2018 தொடர் தான் அவருக்கு கிரிக்கெட் வீரராக கடைசி தொடர் எனவும் கெவின் பீட்டர்சன் ஒப்புக்கொண்டார்.
“கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுக்கு நான் கண்டிப்பாக செல்வேன். இதனால், இந்த கடைசி நேரத்தில் சந்தோசமாக இருக்க போகிறேன். கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நாம் நினைப்பதற்கான பயிற்சி இது,கண்டிப்பாக நான் செய்யவேண்டும்,” என பீட்டர்சன் கூறினார்.
“என்னிடம் இன்னும் சக்தி இருக்கிறது ஆனால் அது குறைந்து கொண்டே வருகிறது,” எனவும் கூறினார்.

2013-14 ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பிரச்சனை செய்தார், அதன் பிறகு அவரை இங்கிலாந்து அணியில் விளையாடவில்லை. இதனால், உலகில் நடந்து வரும் உள்ளூர் டி20 தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார்.
ஜனவரி 2016ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் 2018ஆம் ஆண்டு பிக் பாஷ் தொடரை வரை இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் ஒப்பந்தம் செய்தார்.

ஜூலை மாதம் சர்ரே அணிக்காக விளையாட கடந்த ஐபில் ஏலத்தில் தனது பெயரை எடுத்துவிடுங்கள் என பீட்டர்சன் கூறினார், இதனால் ஐபில் 2017இல் அவர் விளையாடவில்லை.
இது தான் கிரிக்கெட் வீரராக அவரது கடைசி தொடர் என அவர் ஒப்புக்கொண்டார்.
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியவுள்ளது. இந்த பிக் பாஷ் தொடரில் விளையாடி தான் என்னை பற்றி தெரியவேண்டும் என்று இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன், அப்போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி என்று தெரிந்திருக்கும். என்னுடைய வேலை அணிக்கு உதவி செய்வதும், இளம் வீரர்களுக்கும் உதவி செய்வது தான்,” என பீட்டர்சன் கூறினார்.
டிசம்பர் 17, 2017ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஷ் லீக் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தான் முடிகிறது. இந்த தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக பீட்டர்சன் களமிறங்குவார்.