கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் பிராட் ஹோட்ஜ் !! 1
கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் பிராட் ஹோட்ஜ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹோட்ஜ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான பிராட் ஹோட்ஜ், ஆஸ்திரேலிய அணிக்காக ஆறு டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 15 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை இவர் மொத்தம் 33,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் பிராட் ஹோட்ஜ் !! 2
“Time-wise for me, I was probably fortunate I went in (to hospital) on the Saturday in Melbourne. If I’d left it another 24 hours it could have been a lot worse.

சரவேதேச கிர்க்கெட் போட்டிகளில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அதன் பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி.20 தொடரான பிக்பாஸ் லீக்கில் விளையாடி வருகிறார்.

நடப்பு பிக்பாஸ் தொடரில் மெல்போர்ன் அணியில் இடம்பெற்றிருந்த இவர், தொடரின் ஆரம்பத்தில் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இந்த வருட பிக்பாஸ் தொடருடன் தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிராட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் பிராட் ஹோட்ஜ் !! 3
The 43-year-old, who missed the latter stages of the KFC BBL season with the Melbourne Renegades due to complications caused by appendicitis, said this season will be his last.

இது குறித்து பேசிய அவர் “அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். அப்பெண்டிக்ஸ் பிர்ச்சனை காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். அதன் காரணமாக சில போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. உடல்நிலையை கருத்தில் கொண்டு இனி விளையாட வேண்டாம் என்று மருத்துவர்களும் எனக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *