மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!! 1
மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்..

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தான் ஏன் கேப்டனாக பரிந்துரை செய்தேன் என சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.

நம்மில் பலருக்கு 2007 டி20 தொடருக்கான கேப்டனாக மகேந்திர சிங் தோனி அறிமுகமாகி 2007 உலக கோப்பை, 2011 உலகக் கோப்பை 2013 ஐசிசி டிராபி போன்ற ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்த தோனியின் வரலாறு நன்றாகவே தெரியும்.

மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!! 2

ஆனால் அப்போதைய இந்திய அணியில் ஹர்பஜன்சிங், vvs லக்ஷ்மன், மற்றும் ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இருந்தும் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி எப்படி கேப்டன் ஆனார் என்பதை தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அந்த சமயத்தில் இந்திய அணியில் தேர்வாளர்கள் குழு மற்றும் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் உள்ளிட்ட அணியில் இருக்கும் சீனியர் வீரர்களான கங்குலி, சச்சின் போன்ற வீரர்கள், டிராவிட்டுக்கு பிறகு இளம் வீரர் ஒருவரை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.அந்த சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் யாரை கேப்டனாக்க பரிந்துரை செய்கிறீர்கள் என்று தேர்வுக்குழு ஆலோசனை கேட்டது. அதற்கு சச்சின் டெண்டுல்கர் மகேந்திர சிங் தோனியின் பெயரை பரிந்துரை செய்தார்.

மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!! 3

 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஏன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் கேப்டனாக பரிந்துரை செய்தேன் என சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், “இங்கிலாந்தில் இருக்கும் போது என்னிடம் கேப்டன்ஷிப் வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டது, அப்பொழுது நான் நம்முடைய அணியிலேயே மிகச்சிறந்த ஒரு தலைவர் இருக்கிறார். ஆனால் அவர் இளம் வீரர், நீங்கள் அவரை சற்று கவனியுங்கள், அவர்தான் நீங்கள் தேடும் ஒருவர் என்று கூறினேன். நான் மைதானத்தில் இருக்கும் பொழுது அவரிடம் அதிகமாக உரையாடுவேன் குறிப்பாக நான் ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருக்கும் பொழுது தற்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பேன், மேலும் தோனியை குறித்து நான் அப்போது கேப்டனாக இருந்த டிராவிட்டிடம் கேட்ட பொழுது அவரும் என்னிடம் தோனி அமைதியானவராகவும் அதிக பக்குவம் உடையவராகவும், பேலன்ஸானவர் என தெரிவித்திருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!! 4

நல்ல கேப்டன் என்பவர் எதிரணியை விட ஒரு படி முன்னே இருக்கவேண்டும், அவரைப் போன்ற ஒருவர் இருந்தால் நாங்கள் எல்லோரும் கொஞ்சம் சாமர்த்தியமாக விளையாடு என்றுதான் சொல்லுவோம், இது மிக எளிதாக நடந்து விடாது யாராலும் 10 பந்துகளில் 10 விக்கெட் வீழ்த்தி விட முடியாது. எதை செய்வதற்கு முன்பும் ஒரு திட்டம் தேவை போட்டியின் முடிவில் அணியின் ரன்களின் எண்ணிக்கை மிக முக்கியமானது என்பதை புரிந்து செயல்படவேண்டும்.இந்த அனைத்து தகுதிகளையும் நான் தோனியிடம் பார்த்தேன் அதனால் தான் நான் தோனியின் பெயரை தேர்வு குழுவிடம் பரிந்துரை செய்தேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

மகேந்திர சிங் தோனியை கேப்டனாக பரிந்துரை செய்தது இதற்காகத்தான் ; பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!! 5

சச்சின் டெண்டுல்கர் நினைத்தது போலவே இந்திய அணியில் ஆகச்சிறந்த கேப்டனாக தோனி உருவெடுத்து பல சாதனைகளை படைத்துள்ளார். தோனி செய்த சாதனையை இனியும் இந்திய அணியில் ஒருவர் செய்து விடுவார் என்பது எட்டா கனியாகவே இருக்கும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *