கார் விபத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் மரணம்
கார் விபத்து ஒன்றில் பிரபாகரன் என்ற தமிழக லீக் கிரிக்கெட் மரணமடைந்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன்(26) என்னும் இவர் தமிழக லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.
அவர்கள் இரண்டு கார்களில் சேலம் மதுரை நெடுஞ்சாலை வழியாக கந்தம்பாளையம் அருகே சென்றபோது, சாலையைக் கடந்த ஒரு பெண் மீது மோதாமல் இருக்க முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் பிரேக் போட்டிருக்கிறார். அப்போது பின்னால் அந்த காரைத் தொடர்ந்து வந்த இரண்டாவது கார் அந்த கார் மீது மோதி இரண்டு கார்களும் பாலத்திலிருந்து கீழே விழுந்தன.

இதில் கிரிக்கெட் வீரர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவனையில் அணுமதித்துள்ளனர். பலத்த காயமடைந்துள்ள பிரபாகரனின் நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டியதே விபத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.