சாம்பியன்ஸ் டிராபி 2017: அரையிறுதி சுற்றுக்கு செல்ல அனைத்து அணிகளின் வாய்ப்புகள்

தற்போது வரை சாம்பியன் ட்ரோபில் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது ஆனால் இதுவரை ஒரு அணி மட்டும் தான் அரை இறுதிக்கு சென்றுள்ளது மற்ற அணிகள் எதுவும் அரையிறுதி வாய்ப்பை பெறவில்லை.

குரூப் ‘A’ பிரிவில் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது ஆனால் குரூப் ‘B’ பிரிவில் இன்னும் எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை பெறவில்லை.

குரூப் ‘B’ பிரிவில் உள்ள நன்கு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்னும் நன்கு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் விளையாட உள்ளது இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் இலங்கை அணி ஒரு போட்டியிலும் மோத உள்ளது இதில் வெற்றி பெரும் இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை பெரும்.

நிலை 1: இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டிகள் கைவிடப்பட்டு இலங்கை பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால்

இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டிகள் மழையால் கைவிட பட்டாள் அதில் இந்தியா அணி அரை இறுதி வாய்ப்பை பெரும் ஏன் என்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் சிறந்த ரன்ரேட்டை வைத்துள்ளது, எனவே இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்தியா அரையிறுதி வாய்ப்பை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும்.

பிறகு பாகிஸ்தான் இலங்கை மோதும் போட்டியில் வெற்றி பெற்ற அணி அரையிறுதி வாய்ப்பை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும்.

நிலை 2 : தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகள் வெற்றி பெற்று பாகிஸ்தான் இலங்கை போட்டிகள் கைவிடப்பட்டால் :

பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அதில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை பெரும் ஏன் என்றால் பாகிஸ்தான் அணியை விட இலங்கை அணி சிறந்த ரன்ரேட்டை வைத்துள்ளது, பிறகு தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெற்ற அணி முதல் இடத்தை பிடிக்கும்.

நிலை 3 : இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டால்

இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி வாய்ப்பை பெரும் ஏனெனில் இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் சிறந்த ரன்ரேட்டை வைத்துள்ளது.

நிலை 4 : இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்படாமல் இருந்தால்

இரண்டு போட்டிகளிலும் மழை குறுக்கிடாமல் இருந்தால் வெற்றி பெற்ற அணிகள் இரண்டும் அரையிறுதி வாய்ப்பை பெரும், ரன்ரேட்டை அடிப்படையில் வெற்றி பெற்ற அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும்

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.