தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் இப்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 18) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதுகிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை முடிவு செய்தார். கடைசியாக இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதால், அதே அணியுடன் இந்திய விளையாட போகிறது என விராட் கோலி தெரிவித்தார்.
புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் சிறப்பாக தொடங்கினர். முதல் ஓவரே புவனேஸ்வர் குமார் மெய்டன் ஓவர் வீச, பாகிஸ்தான் அணி திணறியது. அடுத்த ஓவரில் பும்ராவும் சிறப்பாக பந்து வீசினார்.
ஆனால், பும்ரா வீசிய பந்தை அடிக்க நினைத்த பக்கர், அவரது பேட் முனையில் பட்டு தோனியிடம் கேட்ச்சாக சென்றது. அதை பிடித்து இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடியபோது, அவர்களின் வாயில் உப்பை வாரி அள்ளினார் நடுவர். அதாவது, அந்த பந்தை நோ-பால் என கூறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்: