தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இதன் 6வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் போது குறைவான நேரத்தில் பந்து வீசியதால் நியூஸிலாந்து அணிக்கு அபராதம் விதிக்க பட்டது.
இந்த அபராதத்தை ஒப்புக்கொண்ட கேன் வில்லியம்சன் 40 சதவீதம் அபராதமும், அணியில் உள்ள மற்ற வீரர்கள் 20 சதவீதம் அபராதமும் செலுத்த வேண்டும்.
“இந்த தொடரில் வில்லியம்சன் கேப்டனாக இருக்கும் போது, இன்னொரு முறை குறைவான நேரத்தில் பந்து வீசினால், ஒரு போட்டியில் வில்லியம்சனை தடை செய்ய நேரிடும்,” என ஐசிசி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து – நியூஸிலாந்து போட்டியில் 87 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த வெற்றியால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் கண்டுள்ளார்கள். அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற இன்னும் நியூஸிலாந்து அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. நியூஸிலாந்து வங்கதேசத்தை வீழ்த்த, ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தினால், நியூஸிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.