சாம்பியன்ஸ் டிராபி 2017: ஜாஹீர் கான் சாதனையை பறித்த ரவீந்திர ஜடேஜா

தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் உள்ள முதல் எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்றது.

இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடைசி நிலையை எட்டியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றது. முதல் தகுதி சுற்று போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜாஹீர் கான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து ஹர்பஜன் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் 14 விக்கெட்களுடன், இஷாந்த் சர்மா 13 விக்கெட்களுடனும், புவனேஸ்வர் குமார் 12 விக்கெட்களுடனும் உள்ளார்கள்.

இதுவரை இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் (2013 மற்றும் 2017) விளையாடியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 விக்கெட் எடுத்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவிற்காக அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். 2000-இல் முதல் போட்டி விளையாடியுள்ள அவர் சாம்பியன்ஸ் டிராபியில் 15 விக்கெட் எடுத்திருந்தார்.

கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கோப்பை வென்றதற்கு ரவீந்திர ஜடேஜாவும் ஒரு முக்கிய காரணமாய் இருந்தார். கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார் அவர் 12 விக்கெட் எடுத்தார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான பார்மில் இல்லையென்றாலும் ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்தியுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடன் 43 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

இலங்கை அணியுடன் அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 6 ஓவருக்கு 52 ரன் கொடுத்தார் ரவீந்திர ஜடேஜா. அதற்கு பிறகு தென்னாபிரிக்கா அணியுடன் 39 ரன் கொடுத்து 1 விக்கெட்டும், வங்கதேசம் அணியுடன் 48 ரன் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.