ஆமா, கங்குலிக்கு விராட் கோலி-யை பிடிக்காது; அதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வற்புறுத்தினாரா? ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு போனது இப்படி தானா? – தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசிய ரகசிய வீடியோ ஆதாரங்கள்!

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா மீது ஜீ நியூஸ் நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அவர் பேசியதை ரகசிய கேமரா மூலம் ரெக்கார்ட் செய்த விடியோ ஆதாரமும் வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பற்றியும், விராட் கோலி-கங்குலி இடையே இருந்த பனிப்போர் பற்றியும் சேத்தன் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி என்ன பேசினார் என்பதை இங்கே பார்ப்போம்.

முதலில் விராட் கோலி டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டுமே விலகுவதாக இருந்தார். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி நீடிப்பது கங்குலிக்கு விருப்பமில்லை. அதற்காக நேரடியாக விலக வேண்டும் என்று அவர் கூறவில்லை. அதைப்பற்றி யோசியுங்கள் என்று விராட் கோலி இடம் அறிவுறுத்தினார். சட்டென்று கோபப்பட்ட விராட் கோலி அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று யாரும் வற்புறுத்த வில்லை. இது விராட் கோலி எடுத்த முடிவு. லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கும் டெஸ்டுக்கும் ஒரே கேப்டன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கங்குலி வலியுறுத்தினார். அதைப்பற்றி யோசிக்க சொன்னார்.

ஆனால் விராட் கோலி வெளியே வந்து கங்குலி வற்புறுத்தினார் என்று கூறியது முற்றிலும் தவறு அப்படி யாரும் அவரை வற்புறுத்த வில்லை. என்று அந்த வீடியோவில் சேத்தன் சர்மா பேசியிருந்தார்.

மேலும் கங்குலிக்கும் விராட் கோலி மீது கோபம் இருக்கிறது. அதனால் ரோகித் சர்மாவிற்கு சாதகமாக கங்குலி ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை. அது எதிர்ச்சையாக நடந்தது.” என்றும் பேசியிருந்தார்.

மேலும், “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே எவ்வித கோபமும் இல்லை. அவர்களுக்குள் ஈகோ இருப்பது உண்மை. இருவருமே இந்திய அணியில் மிகப்பெரிய நட்சத்திரங்கள். பாலிவுட்டில் அப்போது அமிதாப்பச்சன் மற்றும் தர்மேந்திரா இருவருக்கும் இருந்தது போல.” என்றார்.

Mohamed:

This website uses cookies.