எங்க காலத்துல நியாயமா பிட்ச் ரெடி பண்ணி ஜெயிச்சோம்; இப்போ கேப்டன் ரோகித் சர்மா கேக்குற மாதிரி பிட்ச் ரெடி பண்ணி ஜெயிக்கிறாங்க; இப்படி ஜெயிக்கிறதுக்கு.. - ரிக்கி பாண்டிங் குற்றச்சாட்டு! 1

முறைகேடாக பிட்ச் தயார் செய்து ஜெயிக்க முயற்சிக்கிறார்கள் இந்திய அணியினர் என்று பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆண்டுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த டெஸ்ட் போட்டியில் தற்போது இரண்டு நாட்கள் ஆட்டம் முடிந்து இருக்கிறது.

முதல் நாளில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் சேர்ந்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மீதம் இருந்த இரண்டு விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

எங்க காலத்துல நியாயமா பிட்ச் ரெடி பண்ணி ஜெயிச்சோம்; இப்போ கேப்டன் ரோகித் சர்மா கேக்குற மாதிரி பிட்ச் ரெடி பண்ணி ஜெயிக்கிறாங்க; இப்படி ஜெயிக்கிறதுக்கு.. - ரிக்கி பாண்டிங் குற்றச்சாட்டு! 2

அதன்பிறகு முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவின் போது ஏழு விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து, 144 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா இருவரும் அரைசதம் கடந்து களத்தில் நிற்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்திருந்தார்.

பிட்ச் சர்ச்சை

போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே நாக்பூர் மைதானத்தின் பிட்ச் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது. பலரும் இந்திய அணி தங்களுக்கு சாதகமான பிச்சை தயார் செய்து விளையாடுகிறது என்கிற சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

எங்க காலத்துல நியாயமா பிட்ச் ரெடி பண்ணி ஜெயிச்சோம்; இப்போ கேப்டன் ரோகித் சர்மா கேக்குற மாதிரி பிட்ச் ரெடி பண்ணி ஜெயிக்கிறாங்க; இப்படி ஜெயிக்கிறதுக்கு.. - ரிக்கி பாண்டிங் குற்றச்சாட்டு! 3

இந்த விவகாரத்தை இன்னும் தூண்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

“ஆஸ்திரேலியாவில் இப்படியொரு முறை எங்கள் காலகட்டத்தில் இருந்தே கிடையாது. அதாவது ஆஸ்திரேலியா அணியில் இருந்து எவரும் பராமரிப்பாளரிடம் சென்று இப்படிப்பட்ட பிட்ச் வேண்டும் என்று ஒருபோதும் கூற முடியாது. பராமரிப்பாளர்களுக்கு எந்த மாதிரியான பிட்ச் தயார் வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுபோலத்தான் அவர்கள் தயார் செய்வார்கள். பிட்ச் விஷயத்தில் தலையிடுவது முற்றிலும் முறையற்றது.”

எங்க காலத்துல நியாயமா பிட்ச் ரெடி பண்ணி ஜெயிச்சோம்; இப்போ கேப்டன் ரோகித் சர்மா கேக்குற மாதிரி பிட்ச் ரெடி பண்ணி ஜெயிக்கிறாங்க; இப்படி ஜெயிக்கிறதுக்கு.. - ரிக்கி பாண்டிங் குற்றச்சாட்டு! 4

“இரண்டு தினங்களுக்கு முன்பு மற்றவர்களுடன் சேர்ந்து நானும் நாக்பூர் மைதானத்தில் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். முழுக்க முழுக்க சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக தயார் செய்திருந்தார்கள். இதை வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பிட்ச் விஷயத்தில் தலையிடுவது அவர்களுக்கு எப்படி நியாயமாகப்படுகிறது என்றே தெரியவில்லை. அதேபோல் இப்படியான வெற்றி நியாயமானதா என்றும் தெரியவில்லை.” என கருத்து தெரிவித்திருந்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *