Cricket, Best Catch in Cricket, Best Catch in Cricket History, Tim Ludeman, Ms Dhoni,

ஒரு கிரிக்கெட் போட்டியின் போது, விக்கெட்-கீப்பர் தான் முக்கியமான வீரர், ஏனென்றால் மற்ற பீல்டர்களை விட, இவர் தான் நிறைய பந்துகளை பிடிப்பார். ஒரு பில்டர் இல்லாமல் கூட, ஒரு அணி விளையாட தொடரும், ஆனால், ஒரு விக்கெட்-கீப்பர் இல்லாமல் ஒரு அணி விளையாடுவது கஷ்டம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணிக்கு சிறந்த விக்கெட்-கீப்பர் கண்டிப்பாக தேவை. அவருக்கு பேட்டிங்கும் சிறப்பாக விளையாடினால், அது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். மார்க் பவுச்சர் மற்றும் இயான் ஹீலி ஆகியோர் பேட்டிங்கை விட விக்கெட்-கீப்பிங் சிறப்பாக செய்வார்கள். அதே நேரத்தில், ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககரா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் விக்கெட்-கீப்பிங்குடன் பேட்டிங்கும் சிறப்பாக விளையாடினர்.

முன்னாள் ஆஸ்திரேலியா விக்கெட் விக்கெட்-கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இலங்கை அணியின் விக்கெட்-கீப்பர் குமார் சங்ககரா ஆகியோர் விக்கெட்-கீப்பிங் சிறப்பாக செய்து, அத்துடன் பேட்டிங்கும்சிறப்பாக விளையாடி, தன் அணிக்கு பல வெற்றிகளை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அணி எப்போதுமே சிறந்த விக்கெட்-கீப்பரை பரிசளிக்கிறது. அந்த வகையில் வந்தவர்கள் தான் இயான் ஹீலி மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட். தன் விக்கெட்-கீப்பிங்குடன் அதிரடி பேட்டிங்கும் வெளிப்படுத்தினார் கில்கிறிஸ்ட்.

இவர்களை தவிர, பாகிஸ்தான் அணியின் மொயின் கான், இந்தியாவின் கிரண் மோரே, இண்டீசின் ஜெப் டுஜோன், இந்தியாவின் நரேன் தம்மனே ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாக ஸ்டும்ப்பிங் வாய்ப்பை விட்டதில்லை.

ஆனால், இவர்களில் யாரும் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேட்சை பிடித்ததில்லை. ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் தொடரின் போது, அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் விக்கெட்-கீப்பர் டிம் லுட்மன் குருவி போல் பறந்து பிடித்து அசத்தினார். அவர் பிடித்த அந்த கேட்ச் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து. அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *