இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!! 1

ட்விட்டரில் அதிக முறை மென்ஷன் செய்யப்பட்ட அணியின் பட்டியலில் சிஎஸ்கே அணிக்கே முதலிடம். இரண்டாம் இடத்தில் மும்பை அணி.

இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!! 2

இந்த ஐபில் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பனதாகவே அமைந்தது. இரண்டு வருட தடை முடிந்தது என அறிவித்த பொழுதே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு, ஏலத்தில் அனைத்தும் வயதானவர்கள் என கிண்டலடித்த நிலையில், கோப்பையை வென்று அதற்கும் வாயடைக்கும் விதமாக செய்தது.

இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!! 3

இதில் சிறப்பு என்னவென்றால், அந்த அணிக்கு அற்புதமாக ஆடியதே வயதானவர்கள் என சொல்லப்பட்ட வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி, பிராவோ போன்றோர் தான். அந்த அணிக்கு அதிகபட்சமாக ராயுடு 602 ரன்கள் எடுத்தார். இது அந்த தொடரின் 5வது அதிகபட்ச ஸ்கோர். வாட்சன் 555 ரன்கள் இதில் 2 சதங்கள். தோனியும் ரெய்னாவும் 400 ரன்களுக்கும் மேல். மற்ற அணிகளெல்லாம் ஒரேஒரு வீரரை மட்டுமே நம்பி இருக்க. சிஎஸ்கே வில் மட்டும் அனைவரும் ஜொலித்தனர்.

இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!! 4

ஒவ்வொரு வருடமும் ஐபில் முடிந்த பின்னர் ட்விட்டரில் ரசிகர்களால் அதிக முறை மென்ஷன் செய்யப்பட்ட போட்டி மற்றும் அணிகளுக்கான பட்டியல் வெளியிடப்படும். இதில் சிஎஸ்கே அணிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இதற்க்கு அடுத்தபடியாக, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் 2ம் மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. இதிலும் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவே.

இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!! 5

அதிக போட்டோக்கள் பகிறப்பட்ட பட்டியலில் கொல்கத்தா அணிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் வீடியோக்கள் பகிறப்பட்ட பட்டியலிலும் சிஎஸ்கே அணிக்கே முதலிடம்.

Leave a comment

Your email address will not be published.