ரஹானே அதிரடிக்கு காரணம் இதுதான் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சொல்கிறார் !! 1
ரஹானே அதிரடிக்கு காரணம் இதுதான் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சொல்கிறார்..

டி20 தொடரில் ரஹானே புதிய அவதாரம் எடுத்து விளையாடி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

டி20 தொடருக்கு லாயக்கப்பட்டு வர மாட்டார் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரகானே நடப்பு 2023 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் பேசு பொருளாக திகழ்ந்து வருகிறார்.

ரஹானே அதிரடிக்கு காரணம் இதுதான் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சொல்கிறார் !! 2

2023 ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அசுரவேகத்தில் அரைசதம் அடித்து எண்ட்ரீ கொடுத்த ரஹானே, ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு தேவையான தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மாஸ் காட்டிய ரஹானே 29 பந்துகளில் 71* ரன்கள் எடுத்து கொடுத்தார்

அதற்குப் பின் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ரஹானே சொற்பரப்புகளில் தன்னுடைய விக்கெட்டை இழந்தாலும்,கொல்கத்தா அணிக்கு எதிரான ரஹானேவின் ஆட்டம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் ரஹானேவை வியந்து பாராட்டி வருகின்றனர்.

ரஹானே அதிரடிக்கு காரணம் இதுதான் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சொல்கிறார் !! 3
Credits: chennaiipl twitter

புதிய அவதாரமெடுத்துள்ள ரஹானே..

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் டி20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என வியந்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து மிதாலி ராஜ் பேசுகையில்., ரஹானே தன்னுடைய போட்டியில் புதிய கட்டமைப்பை செய்துள்ளார். மேலும் இவர் டி20 தொடருக்கு ஏற்றார் போல் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். ராஹானே தன்னுடைய ஷாட்களில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை ஆனால் அவர் தன்னுடைய அப்ரோச்சை மாற்றியுள்ளார். தற்பொழுது ரஹானே டி20 தொடரில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்று ரஹானே குறித்து மிதாலி ராஜ் பாராட்டி பேசியிருந்தார்.

ரஹானே அதிரடிக்கு காரணம் இதுதான் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சொல்கிறார் !! 4

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்துள்ள ரஹானேவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *