இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார்

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது தென்னாபிரிக்கா. இந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. தோள்பட்டை காயத்தில் இருந்து வெளிவராத டேல் ஸ்டெய்ன், இந்த தொடரில் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஷான் பொல்லாக்கை விட வெறும் 5 விக்கெட்டுகளே ஸ்டெய்ன் கம்மியாக எடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் அவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் கிரிக்கெட் விளையாடவில்லை.

“நான் காயத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் இது நாட்கள் எடுத்து கொள்கிறது. என்னால் ஓட முடிகிறது, பயிற்சி எடுக்க முடிகிறது, ஆனால் என்னால் வீச முடியவில்லை,” என டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

அவரது தோள்பட்டை காயம் காரணத்தினால் இந்த ஐபில்-இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாட வில்லை.

இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் தன்னுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு முன்பு தோள்பட்டை காயம் காயத்தில் இருந்து விடுபட்டு அந்த தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும்,”எங்கள் சொந்த ஊரில் இந்த வருடம் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள வங்கதேசம் அணி வருகிறது. அந்த தொடருக்கு முன்பு, சில போட்டிகளில் நான் விளையாட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்கா விளையாட போகிறது, ஆனால், நான் வேறு அணிக்காக விளையாட போகிறேன்,” என ஸ்டெய்ன் கூறினார்.

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து, சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கு முன்பு 3 ஒருநாள் போட்டிகளும், சாம்பியன்ஸ் ட்ராப்பி முடிந்த பின்னர் 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடவுள்ளன.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.