Cricket, India, Virat Kohli, Danielle Wyatt

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணத்திற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இங்கிலாந்து மகளிர் அணியின் வீரர்கனை டேனியல் வியாட்டின் வாழ்த்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

கோலி - அனுஷ்கா திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த டேனியல் வியாட் 1

கிரிக்கெட் வட்டாரத்தில் விராட் கோலியை டேனியல் வியாட்டுக்கு மிக பிடிக்கும் என தெரியும், பல முறை அவரை பற்றி பேசி இருக்கிறார் டேனியல் வியாட். இது அனைத்தும் 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தை பார்த்து, ட்விட்டரில் அவரை திருமணம் செய்ய கோரி ட்வீட் செய்திருந்த போது தான் இது அனைத்தும் தொடங்கியது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மீண்டும் ஒரு முறை அவரது பெயர் அடிபட்டது. டேனியல் வியாட்டுக்கு விராட் கோலி ஒரு பேட் பரிசளித்திருந்தார், அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவு செய்தார்.

மீண்டும் ஒரு முறை டேனியல் வியாட் ட்விட்டருக்கு வந்து விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இந்த முறை விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணத்திற்கு.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததும் ட்விட்டர் ரசிகர்கள் டேனியல் வியாட்டை ஒரு வழி செய்துவிட்டார்கள். அந்த ட்வீட்களை பாருங்கள்:

https://twitter.com/its_tabrez_/status/940266244447408128

https://twitter.com/its_tabrez_/status/940267697601839105

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு திருமணம் நடந்துவிட்டது என தகவல் வந்தது. ஆனால், திருமணம் நடந்ததா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். அந்நேரத்தில் ட்விட்டரில் வந்து உறுதி செய்தார் கேப்டன் விராட் கோலி.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *