ஆஸ்திரேலியா அணி நிர்வாகமே தப்பு பண்றதுக்கு பர்மிசன் கொடுத்துச்சு.. - பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர் மேனேஜர் திடுக்கிடும் பேட்டி! 1

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னரின் மேனேஜர் சமீபத்தில் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது பந்தை சேதப்படுத்தியது வீடியோ காட்சியில் தெளிவாக தெரிந்ததால் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தலா ஒரு வருடமும், அதற்கு உதவியாக இருந்த கேமரூன் பென்கிராஃப்ட் 9 மாதமும் சர்வதேச போட்டிகளில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Ball tampering

தடைக்கால முடிவடைந்து டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பினர். ஆனால் தற்போது வரை டேவிட் வார்னர்-க்கு சர்வதேச போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்க தடை நீடித்து வருகிறது. இந்த தடையை திரும்ப பெறுமாறு அவர் அணி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார்கள். அதற்கான நேர்காணலும் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக டேவிட் வார்னர்-இன் மேனேஜர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வெளியிட்ட பல்வேறு தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

ஆஸ்திரேலியா அணி நிர்வாகமே தப்பு பண்றதுக்கு பர்மிசன் கொடுத்துச்சு.. - பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர் மேனேஜர் திடுக்கிடும் பேட்டி! 2

அவர் பேசியதில், 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் போது இரண்டு ஆஸ்திரலிய அணி நிர்வாகிகள் நேரடியாக வந்து வீரர்களுக்கு பந்தை சேதப்படுத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். அதன்படி தான் அந்த வேலைகள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற சம்பவம் வெட்டவெளிச்சமாக தெரிந்திருக்கிறது.

2017/18 ஆண்டுகளில் நடந்த ஆசஸ் தொடரில் சில இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர். அந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திடமும் இங்கிலாந்து அணி நிர்வாகத்திடமும் டேவிட் வார்னர் உட்பட சில ஆஸ்திரேலியா வீரர்கள் புகார் அளித்தனர். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ல. என்றார்.

ஆஸ்திரேலியா அணி நிர்வாகமே தப்பு பண்றதுக்கு பர்மிசன் கொடுத்துச்சு.. - பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர் மேனேஜர் திடுக்கிடும் பேட்டி! 3

டேவிட் வார்னரின் மேனேஜர் இப்படி பேசியது தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பி, ஆஸ்திரேலியவிற்கு தலைவலி உண்டாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *