வீடியோ: ஷேன் வாட்சனை கலாய்த்த இந்திய வீரர்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே, மற்ற வீரர்களை கிண்டல் செய்வது, சண்டை போடுவது என போட்டியே விறுவிறுப்பாக இருக்கும், அதேதான் 2013-இல் நடந்த ஒருநாள் தொடரிலும் நடந்தது. இந்த தொடரின் போது பல சண்டைகள், கிண்டல்கள் என பல நடந்தது. அதில் ஒன்று தான் அந்த தொடரின் ஏழாவது மற்றும் கடைசி போட்டியில் நடந்தது.

பந்துவீசும் போது தொடை வலி காரணமாக ஐந்து ஓவர் மட்டுமே வீசிவிட்டு, பிட்சை விட்டு சென்றார் ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன். பேட்டிங்கின் போது நம்பர் 3-இல் இறங்காமல் ஆஸ்திரேலியா அணி 138க்கு 6 என தவித்த போது நம்பர் 8-இல் பேட்டிங் விளையாட வந்தார் ஷேன் வாட்சன். தான் எதிர்கொண்ட முதல் பந்தை அடித்தார் ஷேன் வாட்சன், அந்த பந்து நேராக ஷிகர் தவானிடம் சென்றது. அந்த பந்தை புடித்ததும், வாட்சன் காயத்தால் துடித்தது போலவே நடித்து மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். இதனால், அவரை பார்த்து பேட் காண்பித்தார் ஷேன் வாட்சன். அந்த ஓவர் முடிந்ததும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

மற்றொரு முறை இதே போல் சம்பவம் நடந்தது, ஆனால் இந்த முறை சுரேஷ் ரெய்னா. ஜேம்ஸ் பால்க்னர் அடித்த பந்தை தடுத்த சுரேஷ் ரெய்னா, வாட்சன் காயத்தால் துடித்தது போலவே நடித்து மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். இதை நீங்கள் சொல்லுங்கள், இந்திய வீரர்கள் சொன்னது செய்தது சரியா? தவறா?

அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:

 

SW Staff:

This website uses cookies.