டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்குள் எதிலும் களம் இறங்கி விளையாட முடியும். இன்னும் அவர் பாதிப்பை ஏற்படுத்துவார். தற்போதை இந்திய அணி சிறப்பாக உள்ளது. ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டோனியின் அனுபவத்தை பெற்று, பலன் அடைகிறது.
டோனி ஏற்கனவே அணியில் இருந்து வெளியேறுவதை தொடங்கிவிட்டார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால், அவர் அணியில் இருந்து வெளியேறுவது, அந்த இடத்தில் பெரிய இடைவெளி ஏற்படும்.
அது இந்தியா ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், டிராவிட், லஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோர் வெளியேறியபோது ஏற்பட்டது மாதிரி. ஆஸ்திரேலியாவில் ஜாம்பவான்கள் வெளியேறிய போது ஏற்பட்ட வெற்றிடம் போன்றது’’ என்றார்.
என்னுடையய கிரிக்க்டெ வாழ்விழ் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆடிய் என் ஆட்டம் தான் எனக்கு பிடித்தது. உலகின் சிறந்த வீரர்கள் கூட சரியான நேரத்தில் சோப்பிக்த் தவறுகின்றனர்.
2007 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 104 பந்துகளில் 149 ரன் குவித்தார் ஆடம் கில்கிறிஸ்ட்.
என்னுடைய முன் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் நான் நன்றாக ஆடியுள்ளேன், ஆனால் 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதம் அடிக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர். 2007 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆடிய ஆட்டம் தான் என்னுடைய சிறந்த ஆட்டம்.
எனக் கூறினார் கில்கிறிஸ்ட்
மேலும், நவம்பர் 23ஆம் தேதி ஆஷஷ் தொடர் துவங்கவுள்ளது. அதனைப் பற்றி கில்கிறிஸ் கூறுகையில்,
ஆஷஷ் தொடரில் இரு அணிகளும் சமமாக போராட வேண்டும் என நினைக்கிறேன். இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான் திறமை கொண்ட வீரர்களை வைத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலிய அணி சிறிது மேம்ப்பட்டுள்ளது, அணியின் பந்து வீச்சு மிகப் பலமாக உள்ளது. அதனால் ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என நினைக்கிறேன்.
என்று ஆஷஷ் பற்றியும் தனது கருத்தைக் கூறினார் கில்கிறிஸ்ட்.