சமீப காலத்தில் தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்து கொண்டுவரும் அதே நேரத்தில் அவருக்கு ஆதரவும் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான ஐபில் லீக் வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது.இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே புனே அணி சர்ச்சையில் சிக்க தொடங்கியது. முதலில் தோனியை கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
அதன் பின்னர் புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா தோனியை இழிவுபடுத்தும்படி ட்வீட் செய்தார்.
தொடர்ந்து தோனியின் மோசமான பார்ம் என அடுத்தடுத்து பட்டியல் பெரிதாகியது. இந்த காரணத்தை கொண்டு, அனைவரும் தோனி மீதான விமரசங்களை முன்வைத்து வருவதால், அதிகமாகி பேசிவரும் நபராக மாறியுள்ளார் தோனி.
விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் அவருக்கு ஆதரவும் அதிகரித்து கொண்டே வருகிறது. தோனி ரசிகர்களின் பட்டியலில் இப்பொழுது கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் இணைந்துள்ளார்.
ட்விட்டரில் ‘உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் வீரர் யார்’ என கேட்ட கேள்விக்கு, ‘எனக்கு பிடித்த ஒரே அணி இந்தியா மற்றும் பிடித்த வீரர் தோனி தான்’ என ரிப்ளை செய்தார் சன்னி லியோன்.
favorite team is obviously india and player – Dhoni #AskSunny
— sunnyleone (@SunnyLeone) October 4, 2016