மீண்டும் டெஸ்ட் விளையாடப் போகிறாரா தோனி? அல்லது பயிற்சியா? 1

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையடவுள்ளது.

மீண்டும் டெஸ்ட் விளையாடப் போகிறாரா தோனி? அல்லது பயிற்சியா? 2

தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தது. இந்தியாவுடன் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்திலும் (நவ.11, 12-ந்தேதி) விளையாட உள்ளது.

மீண்டும் டெஸ்ட் விளையாடப் போகிறாரா தோனி? அல்லது பயிற்சியா? 3
வழக்கம் போல் ஆடுகள்த்திற்கு சென்று பார்வையிட்டு அதன் தன்மையை பற்றி ஆடுகள பராமரிப்பாளரிடம் பேசினார். அதன் பின் சிறு பயிற்சி எடுத்துவிட்டு சென்றார்.

கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இலங்கை வீரர்கள் இன்று பிற்பகலுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தோனி அந்த ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் வீரர்கள் அணியும் கிரிக்கெட்டின் வெள்ளை உடை அணிந்து காணப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்றார் தோனி. அன்றிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

மீண்டும் டெஸ்ட் விளையாடப் போகிறாரா தோனி? அல்லது பயிற்சியா? 4
Dhoni spotted with whites in Kolkatta today Nov.09
நியூசிலாந்து அணியுடனான் டி20 தொடர் முடிவிற்குப் பிறகு அடுத்த ஒரு மாதத்திற்கு அவருக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லை. இருந்தும், எப்போதும் கேப்டன் போல் கொல்கத்தா மைதானத்திற்கு  ‘வைட்ஸ்’ அணிந்து வந்தார் தோனி. மேலும், வழக்கம் போல் ஆடுகள்த்திற்கு சென்று பார்வையிட்டு அதன் தன்மையை பற்றி ஆடுகள பராமரிப்பாளரிடம் பேசினார். அதன் பின் சிறு பயிற்சி எடுத்துவிட்டு சென்றார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகு வருகிறது. மேலும், பலர் மீண்டும் தோனி டெஸ்ட் போட்டிகளில் ஆடப் போகிறார்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் கீழே :மீண்டும் டெஸ்ட் விளையாடப் போகிறாரா தோனி? அல்லது பயிற்சியா? 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *