Cricket, India, Sri lanka, Washington Sundar, Ms DHoni

தனது பார்மின் மீது எழுந்த சந்தேகங்களுக்கு நல்ல இன்னிங்க்ஸுடன் பதில் அளித்த மகேந்திர சிங் தோனி, அடுத்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் பங்கேற்க மாட்டார்.

தற்போது ராஞ்சியில் தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் மகேந்திர சிங் தோனி, புதன்கிழமை அன்று ஜார்கன்ட் கிரிக்கெட் வாரியத்திடம் இந்த வருட சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட போவதில்லை என தெரிவித்தார்.

“நேற்று தோனியே இந்த வருட தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்தார்,” என ஜார்கன்ட் கிரிக்கெட் வாரிய செயலாளர் டெபாசிஸ் சக்ரபர்தி கூறினார்.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் தோனி விளையாட மாட்டார் 1
New Delhi: Jharkhand captain MS Dhoni fields during Vijay Hazare Trophy match in New Delhi on Wednesday. PTI Photo by Kamal Kishore(PTI3_15_2017_000076B)

அடிக்கடி அந்த மைதானத்திற்கு சென்று மகேந்திர சிங் தோனி பயிற்சி எடுப்பதால், இந்த வருட சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடுவார் என அந்த அணி எதிர்பார்த்தது.

ஆனால், இப்போது 36 வயதான மகேந்திர சிங் தோனி விளையாடாமல் போவதால், இருக்கும் வீரர்களை வைத்து அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை தக்கவைத்து கொள்ளலாம். இதனால் தொடர்ந்து பார்மில் இருக்க ஜார்கன்ட் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Irfan Pathan, Irfan Pathan IPL, Irfan Pathan IPL 2017, Irfan Pathan Gujarat Lions, Gujarat Lions, IPL 2017, Cricket

ஜார்கன்ட் அணி தோனி இல்லாமல் களமிறங்க உள்ளது, அதே போல பரோடா அணி இர்பான் பதானின் உதவி இல்லாமல் விளையாட போகிறது. இதனால் அவருக்கு பதிலாக பரோடா அணிக்கு தீபக் ஹூடா கேப்டனாக செயல் படுவார்.

இர்பான் பதான் இல்லை என்றாலும், அவரது சகோதரர் யூசுப் பதான் விளையாடுவார். ஆனால் அவர் ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தான் விளையாடுவார். பரோடா அணியில் நயன் மோங்கியாவின் மகன் மோஹித் மோங்கியாவிற்கும் இடம் கிடைத்தது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *