3. சூப்பர் மேக்ஸ்
இந்தமுறை முதலில் நியூசிலாந்து உள்ளுர் போட்டிகளில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் கிரௌவ் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிப்படி,
• டெஸ்ட் போட்டியை போல இரு அணிகளும் இரண்டு இன்னிங்ஸ் ஆட வேண்டும். ஒரு இன்னிங்சில் 10 ஓவர் வீசப்படும்.
• அகலபந்துக்கு 2 ரன்கள்.
• மேக்ஸ் ஜோன் என தனியாக ஒரு பகுதி உண்டு. அதில் அடிக்கப்படும் ரன்கள் இரட்டிப்பாக்கப்படும். உதாரணமாக, 4 க்கு 8 ரன்கள், 6 க்கு 12 ரன்கள்.
• மேலும், 3க்கு பதிலாக 4 ஸ்டம்ப்புகள் வைக்கப்படும்.
இதன்படி, 2002 ம் ஆண்டு நியூசிலாந்தில் ஒரேயொரு போட்டி மட்டும் நடத்தப்பட்டு பின்பு கைவிடப்பட்டது.