இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மோசமான பார்ம் காரணமாக லிமிடெட் ஓவர் போட்டிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்ட வீரர்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் மோசமாக விளையாடினால் நிச்சயம் இந்த தொடரோடு தன்னுடைய ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஷிகர் தவான்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நிச்சயம் ஷிகர் தவான் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த வீரரான இவர் எதிர்வரும் அணிக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் இவர் தன்னுடைய இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.