இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்காவுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் விளையாடமாட்டார் என தகவல்கள் வந்துள்ளது. பாப் டு பிளெஸ்ஸிஸ்க்கு முதல் குழந்தை பிறந்துள்ளது, இதனால் தென்னாப்ரிக்காவிலே சில நாட்கள் தங்கப்போவதாக முடிவெடுத்தார். இதனால் ஜூலை 6 தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தெரிகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடப்போவதில்லை என்பதால் அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் கேப்டனாக செயல் பட உள்ளார். தோள்பட்டை காரணமாக டேல் ஸ்டெய்ன் அவதி பட, தன்னை தானே அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலக, தற்போது டு பிளெஸ்ஸிசும் விளையாடாமல் இருப்பது, தென்னாபிரிக்கா அணிக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆனால், தென்னாப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெர்னோன் பிளாண்டர் உடல்நலம் சரியாகி அணிக்கு திரும்பியதால், அவர் முதல் போட்டியில் விளையாடுவர். இதனால், தென்னாப்ரிக்காவுக்கு சிறிது பலம் வந்திருக்கிறது. காகிஸோ ரபாடா மற்றும் மோர்னே மோர்கெலுடன் சேர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக களம் இறங்க போகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் பெர்ரி ரிச்சர்ட்ஸால் சீனியர் வீரர் ஹெயினோ குஹன் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
“12, 13 வருடமாக இருக்கும் அவருக்கு, இப்போது தான் அணியில் வாய்ப்பு கிடைத்தது,” என ரிச்சர்ட்ஸ் கூறினார்.
“அவருக்கு மன தைரியம் அதிகம், ஆனால் கண்டிப்பாக பிரஷர் இருக்கும். டெஸ்ட் போட்டி என்றால் பிரஷர், லார்ட்ஸ் மைதானம் என்றால் பிரஷர், உங்களுடைய முதல் டெஸ்ட் போட்டி என்றால் பிரஷர். 34 வயதான ஹெயினோ, இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால், தென்னாபிரிக்கா அணிக்கு மேலும் 3, 4 வருடத்திற்கு விளையாட வாய்ப்புகள் இருக்கிறது,” என ரிச்சர்ட்ஸ் மேலும் கூறினார்.