பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நியமித்தது. இதனை பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேர்த்தனர். ஆனால், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பதால் சில கிரிக்கெட் வீரர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியால் பாதிக்கப்படும் ஒரு 5 வீரர்களை இப்போது பார்ப்போம்.
லோகேஷ் ராகுல்
இளம் வீரர்கள் மீது தந்தை பாசம் காட்டுவார் ரவி சாஸ்திரி. சாஸ்திரி ஆலோசராக இருக்கும் போது தான், தன் பயணத்தை தொடங்கி ஆஸ்திரேலியா அணியிடம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். காயத்தில் இருந்து விடுபட்டு, இந்திய அணிக்கு மீண்டும் வர முயற்சி செய்கிறார். ரவி சாஸ்திரி இருப்பதால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து தொடக்க வீரரே களமிறங்க வாய்ப்பு உள்ளது.
யுவராஜ் சிங்
தலைமை பயிற்சியாளர் பதவியில் உட்கார்ந்ததும், 2019 உலககோப்பைக்கு இளம் வீரர்களை ரெடி செய்ய போவதாக ரவி சாஸ்திரி கூறியிருந்தார். இதனால், யுவராஜ் சிங் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடைசியாக அவர் பதவியில் இருக்கும் போது, யுவராஜ் சிங்குக்கு பதிலாக லோகேஷ் ராகுல் மற்றும் மனிஷ் பாண்டே போன்ற வீரர்களை விளையாட வைத்தார். இதனால், எதிர்காலத்தில் யுவராஜ் சிங்கை அணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.
மனிஷ் பாண்டே
மனிஷ் பாண்டேவும் லோகேஷ் ராகுலை போல தான். கடைசியாக ரவி சாஸ்திரி பதவியில் இருக்கும் போது, தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, ஜனவரி 2016-இல் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி வாங்கி தந்தார். ஆனால், காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இதனால், சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு வந்ததால், மனிஷ் பாண்டே மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
செதேஷ்வர் புஜாரா
செதேஸ்வர் புஜாரா போன்ற சிறந்த வீரர்களை ரவி சாஸ்திரி மீண்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டார் என்று சொல்பவர்களுக்கு எந்த பரிசும் இல்லை. ஆஸ்திரேலியா தொடரில் அவர் மண்ணை கவ்வியதால், அணிக்கு மீண்டும் வர அவரால் முடியவில்லை. வங்கதேசம் மற்றும் இலங்கை தொடரிலும் அதே நடந்தது. ஆனால், கடைசியில் ஒரு முறை அவருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தவறவிடாமல் 145* அடித்து இரண்டு கையிலும் பிடித்து கொண்டார். ஆனாலும், எதிர்காலத்தில் புஜாரா விளையாடுவது சந்தேகம் தான்.
மகேந்திர சிங் தோனி
இந்திய அணிக்காக பல கோப்பைகளை வாங்கி தந்தவர் தான் மகேந்திர சிங் தோனி.அணியில் தோனி இருந்தாலே போதும் என ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். இதனால், 2019 உலக கோப்பை வரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.