கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் !! 1
கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டக் பொலிஞ்சர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான டக் பொலிஞ்சர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு பிக்பேஸ், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர்  கடந்து ஆண்டு நடைபெற்ற பிக்பேஸ் லிக்கில் விளையாடினார், இந்த ஆண்டு விளையாடவில்லை.

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் !! 2

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பொலிஞ்சர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள், 39 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ள பொலிஞ்சர், டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 25.92.  அதே போல் ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் !! 3

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற இவர், 2017ம் ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் மொத்தம் 27 போட்டிகளில் விளையாடி, 37 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் !! 4
Left-arm paceman Doug Bollinger has called time on a successful cricketing career in which he represented Australia across all three formats and developed into one of the game’s great characters.

இந்நிலையில் தான் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பொலிஞ்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டு காலம் தனது முன்னேற்றத்துக்கு கை கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் சக வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தனது நண்பர்களுக்கு பொலிஞ்சர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *