முன்னாள் பிசிசிஐ பொருளாளர் ஜோதி பாஜ்பாய் மரணம் 1

லக்னோ, ஜூன் 15: முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) பொருளாளர் ஜோதி பாஜ்பாய் கான்பூரில் புதன்கிழமை அன்று இறந்து போனார், இந்த தகவலை வியாழக்கிழமை என்று அவரின் குடும்பத்தார்கள் அறிவித்தார்கள்.

80 வயதான ஜோதி பாஜ்பாய், கடந்த பல நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் மரியாதைக்குரிய விளையாட்டு நிர்வாகிகளில் ஒருவர் ஜோதி பாஜ்பாய். அதுமட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் மற்றும் செயலாளர் என முக்கியமான பதவியிலும் இருந்துள்ளார்.

கான்பூரின் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் சில பெரிய போட்டிகளைக் கொண்டு உள்ளூர் திறமையைக் கெளரவிப்பதற்காக அவர் பாராட்டப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் கிரிக்கெட் சங்க இயக்குனர் எஸ்.கே. அகர்வால் “கிரிக்கெட்டிற்கான பங்களிப்புக்காகவும் உள்ளூர் திறமையை ஊக்குவிப்பதற்காகவும் எப்போதும் பாஜ்பாய் நினைவுபடுத்தப்படுவார்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐபிஎல் அணியின் ஆணையர் ராஜீவ் சுக்லா பாஜ்பாயியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து “விளையாட்டுக்கு பெரும் இழப்பு” என்று கூறியுள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *