சின்ன பசங்கனு சாதரணமா நினைக்காதீங்க... இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இந்த இரண்டு பேர் கையில் தான் இருக்கு; ரவி சாஸ்திரி அதிரடி !! 1
சின்ன பசங்கனு சாதரணமா நினைக்காதீங்க… இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இந்த இரண்டு பேர் கையில் தான் இருக்கு; ரவி சாஸ்திரி அதிரடி

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிவம் துபே மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வாலின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2ம் தேதி துவங்க உள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டு, ஒவ்வொரு அணிகளும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை தயார் செய்தும் வருகின்றனர்.

சின்ன பசங்கனு சாதரணமா நினைக்காதீங்க... இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இந்த இரண்டு பேர் கையில் தான் இருக்கு; ரவி சாஸ்திரி அதிரடி !! 2

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், சிவம் துபே, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ராஹ் போன்ற சீனியர்களும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி.20 உலகக்கோப்பை தொடரில் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் பங்களிப்பே இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என கருதப்படும் நிலையில், சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வாலின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சின்ன பசங்கனு சாதரணமா நினைக்காதீங்க... இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இந்த இரண்டு பேர் கையில் தான் இருக்கு; ரவி சாஸ்திரி அதிரடி !! 3

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கும் என கருதுகிறேன். முதலாவதாக துவக்க வீரரான ஜெய்ஸ்வாலின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக அவசியம். ஜெய்ஸ்வாலின் பேட்டிங் ஸ்டைல் பற்றி அனைவருக்கும் தெரியும், அவர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எப்படி விளையாடினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். பயம் இல்லாமல் அதிரடியாக விளையாடக்கூடியவரான ஜெய்ஸ்வால் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என கருதுகிறேன். அடுத்ததாக மிடில் ஆர்டரில் களமிறங்கக்கூடிய சிவம் துபேவின் பங்களிப்பும் இந்திய அணிக்கு மிக முக்கியம். சிவம் துபேவின் பேட்டிங் ஸ்டைலே பார்ப்பதற்கு அழகானது. எப்படிப்பட்ட சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும் சிவம் துபேவிற்கு பந்துவீசுவது மிக கடினம். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் மட்டுமே வல்லவராக திகழ்ந்து வந்த சிவம் துபே சமீபகாலமாக வேகப்பந்து வீச்சாளர்களையும் அசால்டாக எதிர்கொண்டு ரன் குவித்து வருகிறார். சிவம் துபே போன்ற ஒருவரால் 20 முதல் 25 பந்துகளில் போட்டியை மொத்தமாக மாற்றி கொடுக்க முடியும் என்பதால் அவரது பங்களிப்பும் இந்திய அணிக்கு மிக அவசியமானது. இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *