ஐபிஎல் ஏலத்தில் தன்னை எடுக்க எந்த அணியும் முன்வராததை நினைத்து மிகவும் மனமுடைந்ததாக வருத்தத்துடன் பேசியுள்ளார் சந்தீப் சர்மா.
ஐபிஎல் மினி ஏலம் கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு தேவையான ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என பலரை தங்களது அணிக்கு எடுத்தனர்.
அதிகபட்சமாக வரலாறு காணாத வகையில், சாம் கர்ரன் 18.5 கோடிக்கும், கேமரூன் கிரீன் 17.5 கோடிக்கும் எடுக்கப்பட்டனர். அடுத்த அதிகபட்சமாக 16.25 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார்.
கடந்த ஐபிஎல் சீசன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சந்தீப் சர்மா, அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். துரதிஷ்டவசமாக இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சந்தீப் சர்மா, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு விளையாடி உள்ளார். 104 போட்டிகளில் 114 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆரம்ப விலையாக 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் பங்கேற்ற இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பதை நினைத்து மிகவும் வருத்தத்துடன் பேட்டி அளித்திருக்கிறார் சந்தீப் சர்மா. அவர் பேசுகையில்,
“மிகவும் அதிர்ச்சடைந்தேன் மற்றும் ஏமாற்றமாகவும் உணர்ந்தேன். நான் எதற்காக எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்று வருந்தினேன். நான் விளையாடிய அணிகளுக்கு முழு ஈடுபாட்டை கொடுத்துள்ளேன். உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை.
எங்கு தவறு நடந்தது என்று எனக்கு புரியவில்லை. உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக் கோப்பையில் நன்றாக விளையாடியுள்ளேன். சையது முஸ்தக் அலி தொடரிலும் எனது பெஸ்ட் கொடுத்து விக்கெட் வீழ்த்தியவர்களில் டாப் 10ல் இருக்கிறேன். ஆனாலும் எதற்காக நான் எடுக்கப்படவில்லை. அன்று இரவு முழுவதும் எனக்கு வருத்தமாக இருந்தது. அநியாயம் இழைக்கப்பட்டது போல உணர்ந்தேன்.” என்றார்.