பின்ச் விலகல்… மீண்டும் மிரட்ட வருகிறார் மேக்ஸ்வெல் !! 1

பின்ச் விலகல்… மீண்டும் மிரட்ட வருகிறார் மேக்ஸ்வெல்

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான   5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

பின்ச் விலகல்… மீண்டும் மிரட்ட வருகிறார் மேக்ஸ்வெல் !! 2

டெஸ்ட் தொடரில் அடைந்த படுதோல்விக்கு ஒருநாள் தொடரில் பழீ தீர்த்துள்ள இங்கிலாந்து இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில், மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (26.1.18) ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பின்ச் விலகல்… மீண்டும் மிரட்ட வருகிறார் மேக்ஸ்வெல் !! 3

இந்நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச், இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக, டர்வீஸ் ஹெட் அணியில் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிபார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல், நான்காவது ஒருநாள் போட்டியில் பின்ச்சிற்கு பதிலாக களமிறக்கப்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பின்ச் விலகல்… மீண்டும் மிரட்ட வருகிறார் மேக்ஸ்வெல் !! 4
Glenn Maxwell has been called into Australia’s squad as batting cover after Aaron Finch was ruled out of the fourth Gillette ODI due to a minor hamstring injury.
இங்கிலாந்திற்கு எதிரான ஆஸ்திரேலிய ஒருநாள் அணி;

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜாஸ் பட்லர், டர்வீஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பைய்ன், ஜைய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரியூ டை, கேமிரான் வொய்ட், ஆடம் ஜாம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *