2019 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் ; மெக்ராத் சொல்கிறார்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
இந்நிலையில் 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி தான் கைப்பற்றும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள மெக்ராத் “சமீப காலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டிகளில் மற்ற அணிகளை விட அபாரமாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணி பங்கேற்ற கடைசி 22 ஒருநாள் போட்டிகளில் 19 போட்டிகளில் இங்கிலாந்து அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலககக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, போதக்குறைக்கு அடுத்த தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது இங்கிலாந்து வீரர்களுக்கு கூடுதல் பலம்.

ஆனால், அதே வேளையில் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதையில் வழிநடத்தி அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு ஜோ ரூட் இன்னும் முன்னேறவில்லை. என்னை பொறுத்தவரையில் ஜோ ரூட் தற்போதைய கிரிக்கெட் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர், ஆனால் ஒரு கேப்டனவதற்கு அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது வரும்” என்று தெரிவித்துள்ளார்.