கேஎல் ராகுல் கதை முடிஞ்சிச்சு.. ஹர்திக் பாண்டியா அத்தியாயம் துவங்கிருச்சு – தினேஷ் கார்த்திக் பேச்சு!

அடுத்த 12 மாதங்களுக்கு ஒருநாள் போட்டிகளில் ரோகித் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தான் கேப்டன், துணை கேப்டன்களாக இருப்பார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார். ஆனால் கேஎல் ராகுல் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா-விற்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

ஏனெனில் இந்த 12 மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் பலரும் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக ஷிகர் தவன், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரும் இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா திடீரென துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்டுகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை வரை ரோகித் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கேப்டன் மற்றும் துணைகேப்டன் பொறுப்பில் நீடிப்பார்கள் என பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். அவர் கூறியதாவது:

“பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவு மிக நுணுக்கமானது. ஏனெனில் கேஎல் ராகுல் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தார். தற்போது ஹர்திக் பாண்டியாவை நியமித்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பு எத்தகையது என்பதை நிரூபித்திருக்கிறார். அதன் எதிரொலியாகத்தான் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் ஆகவும் உயர்ந்திருக்கிறார்.

கடந்த 12 மாதங்களில் இந்திய அணிக்கு குறிப்பாக ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான், கேஎல் ராகுல் போன்ற மூத்த வீரர்கள் கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள். இளம் வீரர் ரிஷப் பண்ட்-டிற்கும் இந்த பொறுப்பு கொடுத்து சோதிக்கப்பட்டது. பும்ரா துணை கேப்டன் ஆக இருந்திருக்கிறார் அவரும் கேப்டன் ஆகவேண்டிய வரிசையில் இருந்தார். இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா-விற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் கட்டாயம் 50 ஓவர் உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். கட்டாயம் அதுவரை இவர்கள் இருவரும் தான் கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆக இருப்பார்கள்.” என பேசி உள்ளார் தினேஷ் கார்த்திக்.

Mohamed:

This website uses cookies.