தோனி – பாண்டியவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தையம்!! யார் வெற்றி பெற்றது தெரியுமா?
இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி துவங்கும் முன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் வைக்கப்பட்டது. ஏற்கனெவே நன்றாக ஓடும் தோணியுடன் மோதினார் ஹர்திக் பாண்டியா.
36 வயதான விக்கெட் கீப்பர் தோனி ஒருபுறம், 23 வயதான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒருபுறம். ஆடுகளத்தில் தன்னுடன் மறுபக்கம் நிற்கும் வீரரின் காலை ஓட வைத்தே உடைத்து அணுப்புபவர் தோனி. ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் எல்லாம் 2 ரன் ஓடி விடுவார். ஐ.பி.எல் போட்டிகளில் எல்லாம் தோனியுடன் ஒடும் ஜடேஜா பலமுறை மூச்சு திணற திணற ஓடுவதை பலமுறை பார்த்திருப்போம். சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் கூட 36 வயதான தோனி 22 வயதான குல்தீப் யாதவை விட ஆடுகளத்தில் மிக அதி வேகமாக ஓடுகிறார், 4 நொடியில் அந்த 24 மீட்டர் ஆடுகளத்தை கடக்கிறார் என்பதை பார்த்திருப்போம்.
அதேபோல ஹர்திக் பாண்டியவுடன் இன்று காலை வைத்த 100 மேட்டர் ஓட்டப்பந்தையத்தில் கிட்டத்தட்ட தோனியை நெருங்குகிறார் ஹர்திக், ஆனால் சுதாரித்துக் கொண்ட தல சற்று வேகத்தை அதிகரித்து வேகமாக ஓடி பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்.
A quick 100 metre dash between @msdhoni and @hardikpandya7. Any guesses on who won it in the end? #TeamIndia #INDvSL pic.twitter.com/HpboL6VFa6
— BCCI (@BCCI) December 13, 2017
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் தோற்றால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இழக்க நேரிடும். டெஸ்ட் தொடரை இலங்கை அணியும் ஒரு நாள் தொடரை எப்படியாவது கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அணி விவரம்:
ரோகித் (கேப்டன்), தவான், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், பாண்ட்யா, தோனி, புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சேஹல்.
கடந்த போட்டியில் ஆடிய குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறவில்லை. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.