மீண்டு வந்த ஹர்சா போக்லே!! 1

இந்திய ஆஸ்திரேலியத் தொடரில் முன்னனி வர்ணனையாளரான ஹர்சா போக்லே வர்ணனை செய்யவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்க்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சி அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

2016ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருடன் அவரை வர்னனை செய்வதில் இருந்து நிருத்தியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்.

இந்திய முன்னனி வீரர்களான விராத் கோலி, மகேந்திர சிங் தோனி என பலர் அவர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

மீண்டு வந்த ஹர்சா போக்லே!! 2

ஒரு இந்திய வர்ணனையாளர் இந்திய வீரர்களை கடுமையாக் விமசிப்பதும், மற்ற நாட்டு வீரர்களை புகழவதுமாகவே இருந்து வருகிறார். இது போன்ர செயல்கள் கண்டிக்கத்தக்கது என மறைமுகமாகக் குற்றம் சாட்டினர்.

அதனைப் போலவே, இந்திய பாலிவுட் திரையுளகின் சூப்பர் ஸ்டாரும் கிரிக்கெட் ரசிகருமான அமிதாப் பச்சனும் இதே குற்றச்சாட்டை நேரடியாகவே தனது ட்விட்டர் பக்கதில் பதிவு செய்து முன்வைத்தர்.

அதனை, ரீட்வீட் செய்திருந்தார் அப்போதைய இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி.

அதாவது, ஒரு இந்திய வர்ணனையாளர் இந்திய வீரர்களை சாடிக்கொண்டிருப்பது மட்டுமே நல்லதல்ல. நம் அணி வீரர்ஹளிடம் சிறிது கூடவ திறமை இல்லை.? என, ஹர்சா போக்லேவை நேரடியாகவே சாடினார்.

மீண்டு வந்த ஹர்சா போக்லே!! 3

தற்போது தன் முழுப்பணியும் கிடைத்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்  ஹர்சா போக்லே.

அவர் இதனை பற்றி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய ஆஸ்திரேலியத் தொடரில் வர்ணனையாலர் குழுவில் சேர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல , அற்புதமான தொடரை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

என பதிவிட்டிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *